இப்ராகிம் அலி வழக்கு தள்ளுபடி: ரிம50,000 செலவுத்தொகை கொடுக்க உத்தரவு

ibrபெர்காசா தலைவர்  இப்ராகிம்  அலி,  த  சன் நாளேட்டுக்கு  எதிராக  தொடுத்திருந்த  அவதூறு  வழக்கை  ஷா  ஆலம்  உயர்  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்தது.

நீதித்துறை  ஆணையர்  எம். குணாளன்,  அச்செய்தித்தாளில்  வந்திருந்த  கட்டுரை இப்ராகிம்  பற்றியது  அல்ல  என்றும்  மலாய்க்காரர் உரிமைக்குப்  போராடும்  பெர்காசா  பற்றியது  என்றும்  தீர்ப்பளித்தார்.

கட்டுரையை  வெளியிட்டது  நியாயமே  என்றும்  செய்தித்தாளுக்கு  அதற்கான  சிறப்புரிமை உண்டு  என்றும் குணாளன்  கூறினார்.

“வாதி(இப்ராகிம்) ரிம50,000 செலவுத்தொகை  கொடுக்க  வேண்டும்  என்றும்  நீதிமன்றம்  உத்தரவிடுகிறது”, என்றாரவர்.