மகாதிரிடமிருந்து நஜிப்பைக் காப்பாற்றுங்கள்: அம்னோ தலைவர்களுக்கு அறைகூவல்

defendஅம்னோ  தொகுதித்  தலைவர்கள்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  குறைகூறும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்குப்  பதிலடி  கொடுக்க  வேண்டும்.

அவர்கள்  பிரதமருக்குத்  தனிப்பட்ட  முறையில்  ஆதரவு  தெரிவிப்பதைவிட  இதைச்  செய்வதே  முக்கியமாகும்  என்கிறார்  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர்  சைட்  அலி  அல்ஹாப்ஷி.

தொகுதித்  தலைவர்கள்  சிலர்  நஜிப்பை  ஆதரிக்கிறார்களே  தவிர  மகாதிர்  அல்லது  எதிரணியினரின் குற்றச்சாட்டுகளை  எதிர்ப்பதில்லை.

“நஜிப்புக்கு  இப்படிப்பட்ட  ஆதரவு  தேவையில்லை.

“அவர்கள்  மகாதிரின்  ஆதாரமற்ற  குற்றச்சாட்டுகளை  எதிர்க்க  வேண்டும். அதுதான்  அவருக்குத்  தேவை”, என்று சைட் அலி  கூறினார்.