நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் பண்டிகர் அமின் முலியா முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கி விட்டார்.
நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுவதை பண்டிகர் மறுத்திருப்பது தா ம் ஒரு பொய்யை கூறியிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மகாதிர் கூறினார்.
“அவர் ராஜினாமா செய்யவில்லை என்று கூறியதன் மூலம் அவர் என்னை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கி விட்டார். என்னை வந்து பார்க்குமாறு நான் அவரை அழைக்கவில்லை.
“அவர் அவரது (ராஜினாமா) கடிதத்தை (பிரதமர்) நஜிப்பிடம் கொடுத்து விட்டதாக கூறினார். அவர் (பண்டிகர்) என்னிடம் கூறியதை அப்படியே மீண்டும் கூறினேன்.
“ஆனால், அவர் என்னை ஒரு பொய்யரைப் போல் ஆக்கிவிட்டார். இது எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது”, என்று மகாதிர் புத்ராஜெயாவில் ஒரு புத்தக வெளியீட்டிற்குப் பின்னர் கூறினார்.
அவரை மீண்டும் சந்திப்பீரா என்று கேட்டதற்கு, “நான் அறியேன்”, என்று பதில் அளித்தார் மகாதிர்.
நஜிப் ஆட்சியில் பொய்யெல்லாம் சகஜமப்பா.தலைவர் போல் தொண்டர் இருப்பது தப்பா?
ஐயா, முன்னாள் பிரதமரே, உங்கள் ஆட்சி காலத்தில் எத்தனை பேரை நீங்கள் சுத்தலில் விட்டிருப்பிர்கள் . அதன் விளைவுதன இது !!!!
வாய் அரிப்பு வந்து பேசினால் இதுவும் நடக்கும் இதற்கு மேலேயும் நடக்கும் .
பொய்யர் எல்லாம் அவை தலைவராக இருந்தால் …. எப்படி இந்த நாடு உருப்படும்….
இரும்பு கரம் கொண்டு நீங்கள் செய்த வேலையை மக்கள் மறக்கவில்லை துன் அவர்களே ! விதைத்ததை அறுவடை செய்கிறீர் !
அது சரி, உங்களை மெய்யர் என்று நீங்களே சொல்லிக் கொண்டால் எப்படி?
இந்நாட்டின் உயரிய இடத்தில் உட்காருபவரின் மீதே நம்பகத்தன்மை போய் விட்டதால் அந்த நாடாளுமன்றத்திர்க்கே அவப்பேர்தானே?. பொய்யன் மாமக்தீரா அல்லது அவைத்தலைவரா? இதற்கும் சத்தியம் செய்து தப்பித்துக் கொள்வார்களோ?.
வினை விதைத்தவன் வினை அறுப்பான்…தன் வினை தன்னை சுடும்…