1எம்டிபி மீட்புத் திட்டம் பலனளிக்கும்: நஜிப் நம்பிக்கை

planபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், 1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்  கடன்களைக்  குறைக்கும்  திட்டம்  பலனளிக்கும்  என்று  நம்புகிறார்.

“நடவடிக்கை  எடுத்து  1எம்டிபி-இன்  மொத்த  கடனைக்  குறைக்க  முடியும். அதைத்தான் அரசாங்கம்  செய்து  வருகிறது.

“விரைவிலோ அல்லது  சற்று  காலம்  தாழ்த்தியோ 1எம்டிபி  மீட்பு  நடவடிக்கைகளின்  நோக்கத்தை  அடைய  முடியும்  என்பதை  நிரூபித்துக்  காட்டுவோம்”. இன்று  காலை  புத்ரா  ஜெயாவில்  நிதி  அமைச்சு  ஊழியர்களின்  மாதாந்திரக்  கூட்டத்தில்  பேசியபோது  நஜிப்  இவ்வாறு  கூறினார்.

தலைமைக்  கணக்காய்வாளர்  அலுவலம்   அதன்  அறிக்கையைப்  பொதுக்  கணக்குக்குழுவிடம்  ஒப்படைத்த  பின்னர்  1எம்டிபி  தொடர்பான  கேள்விகளுக்குப்  பதிலளிக்கப்படும்  என்றும்  நஜிப்  தெரிவித்தார்.

1எம்டிபி  தொடர்பில் சமூக  வலைத்தளங்களில்  வெளியிடப்படும் தகவல்களை  நம்ப  வேண்டாம்  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார்.