பண்டிகார் வீட்டில் செய்தியாளர் கூட்டம்; ஊகம் வலுக்கிறது

panமக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  இன்று  பிற்பகல் திடீர்  செய்தியாளர்  கூட்டமொன்றுக்கு  ஏற்பாடு  செய்துள்ளார்.

முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  பண்டிகார்  பதவி விலகி  விட்டார்  என்று  கூறிக்  கொண்டிருப்பதைத்  தொடர்ந்து  இக்கூட்டம்  நடைபெறுவதால் இது  பல  ஆருடங்களுக்கு  இடமளித்துள்ளது.

பதவி  விலகியதாகச்  சொல்லப்படுவதை  பண்டிகார்  மறுத்தார்.  ஆனால்,  மகாதிர்  உறுதியாக  இருக்கிறார்.   பதவி  விலகல்  கடிதத்தைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கிடம்  கொடுத்து  விட்டதை பண்டிகார்  அவரைச்  சந்தித்தபோது  தெரிவித்தாராம்.

மக்களவைத்  தலைவர்  இன்று  நாடாளுமன்றம்  வரவில்லை.