பால் ஸ்டேட்லனுக்கு அரசாங்கம் பணம் கொடுத்ததில்லை

apcoஅப்கோவின்  முன்னாள் தலைவர்  பால்  ஸ்டேட்லன் பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  ஊடகத்  தொடர்பான  நடவடிக்கைகளையெல்லாம்  கவனித்துக்  கொண்டார்  என்றும்  அதற்காக  அவருக்குப் பணம்  கொடுக்கப்பட்டது  என்றும் கூறப்படுவதை  அரசாங்கம்  மறுக்கிறது.

“இதுவரை  பால்  ஸ்டேட்லனுக்கு  ஊதியம்  என்ற  வகையில்  அரசாங்கம்  எதுவும்  கொடுத்ததில்லை”, என  பிரதமர் துறை  அமைச்சர்  ஷஹிடான்  காசிம்  நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதிலில்  கூறினார்.

பிரதமர்  அலுவலக  ஊடகக்குழு  உறுப்பினர்  என்ற  முறையில்  பால்  ஸ்டேட்லனுக்கு  கொடுக்கப்பட்ட  ஊதியத்தை  அறிந்துகொள்ள  விரும்பிய  செப்பாங்  பாஸ்  எம்பி முகம்மட்  ஹனிபா  மைடினுக்கு  ஷஹிடான்  இவ்வாறு  பதிலளித்தார்.

ஆனால், ஸ்டேட்லன் ஊடகக்குழு  உறுப்பினர்களில்  ஒருவர் என்பதை ஷஹிடான்  மறுக்கவில்லை.