வரலாற்றைத் திரித்துக் கூறியதால் ‘நியு வில்லேஜ்’ படம் தடை செய்யப்பட்டது

villageஉள்ளூரில்  தயாரிக்கப்பட்ட  ‘த நியு  வில்லேஜ்’  சீனப்படம், வரலாற்றைத்  திரித்துக் கூறி  மலாயா  கம்முனிஸ்டுக்  கட்சியின்(சிபிஎம்)  புகழ்பாடுவதுபோல்  இருந்ததால்தான்  தடை  செய்யப்பட்டதாக  உள்துறை  அமைச்சு  கூறிற்று.

“அப்படம் சிபிஎம்  போராட்டத்தைப்  பெருமைப்படுத்துவதாகவும்  பிரிட்டிஷ்  ஆட்சியாளர்களின்  கொடுமைகளைச்  சித்திரித்த  படம்  சிபிஎம்-மின்  கொடுமைகளை  அறவே  காண்பிக்கவில்லை  என்றும்  அதற்கு  எதிராக  புகார்கள்  செய்யப்பட்டன”, என  அமைச்சு  நேற்று  நாடாளுமன்றத்தில்  அளித்த  பதிலில்  கூறியது.

சிபிஎம்  புதுக்கிராம   மக்களிடம்  நல்லவிதமாக  நடந்துகொள்வதுபோல் படத்தில்  காண்பிக்கப்பட்டிருந்தது.

அவற்றையெல்லாம்  கருத்தில்கொண்டுதான்  2013-இல்  அப்படத்துக்குத்  தடை  விதிக்கப்பட்டது.