தம் கொள்கைகளையும் ஆட்சிமுறையையும் போற்றுபவர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுபவர் தூற்றட்டும் அதற்காக முன்வைத்த காலைப் பின்னுக்கு இழுக்கப்போவதில்லை என்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதியாக இருக்கிறார்.
“அண்மைக் காலமாக பலவித சவால்களும் தடங்கல்களும் எதிர்பட்டபோதும் அரசாங்கமும் நானும் தேர்ந்தெடுத்துள்ள பாதை ஒன்றே ஒன்றுதான் -முன்னோக்கிச் செல்லல்.
“நாங்கள் திரும்பிப் பார்க்கப் போவதில்லை”, என நாடாளுமன்றத்தில் 11வது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்த பின்னர் நஜிப் அறிவித்தார்.
பிரதமர் தம் உரையில் முன்னாள் பிரதமர் குறைகூறும் விவகாரங்களையும் தொட்டுப் பேசினார்.
“அரசாங்கம் நேர்மையான நோக்கத்தில், ஒட்டுமொத்த உதவித் தொகையை நீக்கிவிட்டு இலக்குக் குழுக்களுக்கு 1மலேசியா மக்கள் உதவித் தொகை வழங்க முடிவு செய்தபோது அதை இந்தப் பக்கம் குறை சொல்கிறாகள் அந்தப் பக்கம் குற்றம் சாட்டுகிறார்கள்”, என்று நஜிப் குறிப்பிட்டதும் எம்பிகள் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக புன்னகைத்தார்கள்.
முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். மற்றதை பிறகு பார்க்கலாம்….
பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டிருப்பவர் உங்களை நேரிடையாகவே தாக்க ஆரம்பித்து விட்டார். அதுவும் உங்களுக்கு வக்காலத்து வாங்கும் அமினோ மந்திரிகள் முன்னிலையிலேயே!. இதில் வேறு “நாங்கள் திரும்பிப் பார்க்கப் போவதில்லை” என்ற சவடால் பேச்சு!. பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு முறைத்துப் பார்பவரை திரும்பிப் பார்க்க வேண்டாம் பக்க வாட்டில் பார்த்தாலே போதும். உங்க தலைமைப் பதவி இலட்சணம் தெரிந்து விடும்.
கவலை வேண்டாம். உங்களுக்கு கூஜா தூக்க பலர் தயாராய் இருக்கும் போது மக்களை பற்றி கவலை வேண்டாம்.
அப்படி போடு ராசா நல்ல போட்டி .
நஜிப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது “11வது மலேசியத் திட்டமா ?” அல்லது அரசாங்கம் நாட்டுக்கும் மக்களுக்கும் போடபோகும் பட்டை நாம திட்டமா ? (அதாவது “IIIவது மலேசியத் திட்டமா ?”) என்பதுதான் இப்போதைய கேள்வி.
பின் வாங்கினால் மாமா மகாதீர் முட்டுகிறார் என்று முன்னோக்கிச் செல்லல் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்கள்.
எதற்கும் “தெரியாத தேவதையைவிட தெரிந்த சாத்தானே மேல்” என்பதனையும் நினைவில் இருப்பது நல்லது
பில்லியன்கள் பின் தொடரும்போது முன் நோக்குபவன்….நோக்குவதுதானே அறிவுடைமை,,,,,,,,உன் காட்டில் மழை ,,,,,,,
முன்னோக்கிச் செல்லல் என்றால் நாடு முன்னேற்றத்தை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் உங்கள் தலமைத்துவத்தில் பின் தங்கிய நாடாக அல்லவா நாம் கருதப்படுகிறோம்!