1எம்டிபி விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கணக்காய்வு முடிவடைய வேண்டும் என்று அரசாங்கம் மக்களிடத்தில் அடிக்கடி கூறிவரும் வேளையில், கசியவிடப்பட்டுள்ள ஒரு வீடியோ பதிவில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
அந்த வீடியோ கடந்த வாரம் பகாங்கில் நடைபெற்ற ஒரு பிரத்தியோக அம்னோ உறுப்பினர்கள் அடங்கிய சந்திப்பில் முகைதின் யாசின் அதிகாரிகள் இனிமேலும் காத்திருக்கக் கூடாது என்று கூறுவதை பதிவு செய்துள்ளது.
“நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நாம் ‘பரவாயில்லை, இன்னும் கொஞ்ச நேரம் கொடுப்போம்’ என்று இருக்க முடியாது’. முடியாது!”, என்று முகைதின் யாசின் கோபமாகக் கூறுகிறார்.
இச்சம்பவம் ஜன்டா பாய்க்கிலுள்ள அம்னோ பயிற்சி மையத்தில் கடந்த சனிக்கிழமை 1எம்ஐடிபி கணக்காய்வாளர் அலுவலகத்தின் அறிக்கைக்கு காத்திருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட தினத்திற்கு அடுத்த நாள் நடைபெற்றதாக நம்பப்படுகிறது. பிரதமர் நஜிப்பும் இது போன்ற கோரிக்கையை விடுத்துள்ளார்.
இந்த ஏழு நிமிட வீடியோவை நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ்சின் முன்னாள் ஆசிரியர் ஃபிர்டாவுஸ் அப்துல்லா நேற்று வெளியிட்டார்.
இந்த வீடியோ பதிவு வெளியானதால் செய்தியாளர்களின் கவனம் இன்று நாடாளுமன்றத்தில் நஜிப் வெளியிட்ட 11 ஆவது மலேசிய திட்டத்திலிருந்து முகைதின் யாசின் பக்கம் திரும்பியது. அந்த வீடியோ உண்மையானது என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
“அக்கருத்துகள் பிரத்தியோகமாக தெரிவிக்கப்பட்டவை…(இந்த விவகாரத்தை) நன்கு அறிந்துகொள்வதற்காக தெரிவிக்கப்பட்ட அவை என்னுடைய மற்றும் எனது அரசியல் சகாக்களின் கருத்துகளாகும்”, என்று முகைதின் கூறினார்.
முஹிடின்னுக்கு அவசரம் இல்லை , மாதிருக்குதான் அவசரம் ! அந்த வீடியோ பொய் என்று சொல்லி பல்டி அடிக்க உங்களுக்கு சொல்லியா தரவேண்டும் ?
அவரே எப்படி கொஞ்ச நாளில் இவ்வளவு கடன் வரும் என்று கேட்டால் அவர் அரசாங்கத்தில் துணை பிரதமர் என்று சொல்லிக் கொள்ள என்ன தகுதி இருக்கின்றது. கூடவே இருந்து, ஆடு பாம்பே, ஆடு பாம்பே விளையாடு பாம்பே என்று மகுடி ஊதி விட்டு இப்ப மகுடியை மறைச்சு வச்சுட்டா எல்லாம் தீர்ந்து விடுமா?.
இவ்வளவு காலம் 1MDB – டை தற்காத்து பேசியதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலைதானே. இப்படி பட்டவரா துணை பிரதமர்?. இவரா அடுத்த பிரதமர். வேண்டவே வேண்டாம்?.
கூடவே இருந்து கும்மாளம் போட்டுவிட்டு இப்பொழுது நாடகம் ஆடுகிறான் .
குழுவாக குண்டடிக்கும் போது சந்தோசமாக இருந்ததோ? இப்பொழுது பிரச்சனை எழுந்தவுடன் தன் குண்டுகளை எடுத்துக் கொண்டு விளையாட்டில் இருந்து வெளியேற “பிலான்” பொடுகிறார் இந்த “லாலாங்”? வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆகவேண்டும்.
1எம்டிபி மீட்புத் திட்டம் பலனளிக்கும்: நஜிப் நம்பிக்கை
Tuesday, May 19, 2015 11:33 am
ஆனால், 1எம்டிபி மீட்புத் திட்டம் பலனளிக்கும் என்பதில் முகைதின் யாசினுக்கு அவநம்பிக்கையா ?
ஐயோ, பத்திக்கிச்சு, பத்திகிச்சு!. அமிநோவில் நெருப்பு பத்திகிச்சு.
இங்கு இவன்களின் ஆட்டம் 57 ஆண்டுகளாக நடை பெறுகிறது- இதுவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை– இது இன்னும் தொடரும் காரணம் உட்கார்ந்து தின்னும் அம்னோ சோம்பேறிகள் எல்லா அதிகாரத்தையும் தங்களின் கையில் வைத்திருப்பதின் விளைவு– வெளிப்படை இன்மையே காரணம். 1MDB தலைவன் யார்? இதுவே ஜப்பான் ஆகா இருந்தால் பிரதமன் என்றோ தன்னுடைய கையால் ஆகாத தனத்தை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்து இருப்பான். பதவியில் தொங்கிக்கொண்டு இருக்க மாட்டன்.