ஸூனார் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுக: உலக என்ஜிஓ-கள் கோரிக்கை

zunarஅனைத்துலக  என்ஜிஓ-களின்   கூட்டமைப்பு  ஒன்று, கேலிச்சித்திர  ஓவியர்  ஸூனார்மீது  சுமத்தப்பட்டிருக்கும்  ஒன்பது   குற்றச்சாட்டுகளையும்  கைவிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.

அவை  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எழுதிய  கடித்தத்தில்  1948 தேச  நிந்தனைச்  சட்டத்தையும்  இரத்துச்  செய்யுமாறு  வலியுறுத்தின.

“கருத்துச்  சுதந்திரம்  மக்களாட்சி  சமுதாயத்தின்  இன்றியமையாத  கூறாகும்.  இந்த  உரிமையை, அரசாங்கத்தைக்  குறை  சொல்பவர்கள்  உள்பட,  அனைவருக்காகவும்  மலேசிய  அதிகாரிகள்  பாதுகாக்க  வேண்டும்”, என்று  அவை  கேட்டுக்கொண்டன.

அக்கடிதத்தில் Article 19, English PEN, Index on Censorship, Media Legal Defence Initiative , PEN International  முதலியவை  கையொப்பமிட்டுள்ளன.