பாஸ் பாக்கத்தானிலிருந்து தாராளமாகப் பிரியலாம், டிஎபி சவால்

 

Hadichallenged1பாக்கத்தான் பங்காளிக் கட்சியான பாஸ் அக்கூட்டணியிலிருந்து எவ்விதத் தடையுமின்றி விலகிக் கொண்டு  அம்னோவுடன் சேர்ந்து ஓர் அரசாங்கத்தை அமைக்கலாமே என்று டிஎபி அக்கட்சிக்கு சவால் விட்டுள்ளது.

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இப்போதெல்லாம் அதிகப்படியாக ஓர் அம்னோ தலைவரைப் போல் நடந்து கொண்டு இன உணர்ச்சிகளைத் தூண்டி டிஎபியை தாக்கிக் கொண்டிருக்கிறார் என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

அவரை ஊன்றிக்கவனித்தால் அவர் ஓர் அம்னோ தலைவர் போல் இருக்கிறார். அவர் அம்னோ மற்றும் பாரிசானுடன் இணைந்து ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாக முன்பு கூறியிருந்தார்.

“இப்போது அவர் எங்களைத் தாக்குகிறார். இது ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை அடைவதற்கான அவரது முயற்சியா?

“அவர் அம்னோவுடன் இருக்க விரும்பினால், அவருக்கு தடை ஏதும் இல்லை. ஆனால், முட்டாள்தனமாக பேசக் கூடாது, மற்றும் உண்மையற்றதும் தீய எண்ணமுடையதுமான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்”, என்று லிம் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

Hadichallenged2அம்னோவுடன் எப்படி கூட்டுச் சேர்வது என்பது பற்றிய சிந்தனைக் கருத்துகள் ஹாடியிடம் இல்லாதிருப்பதால், அவரது நோக்கத்தை அடைவதற்கு டிஎபியை இனவாத அடிப்படையில் தாக்குவது அவரது தந்திரமாக இருக்கிறது என்று லிம் மேலும் கூறினார்.

“(நாட்டை நாங்கள்தான் ஆள வேண்டும்) என்று நாங்கள் எப்போதாவது கூறியிருக்கிறோமா?”, என்று லிம் வினவினார்.

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் ஹாடியின் நடத்தை பாஸ் கட்சித் தலைவருக்கு பாக்கத்தான் கூட்டணியில் தொடர்ந்து இருக்க விருப்பம் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டியது.

“அவர் அம்னோ மற்றும் பாரிசானுடன் இருக்க விரும்பினார், அதைப் பகிரங்கமாகச் செய்ய வேண்டும். அதைத் துணிவுடன் செய்ய வேண்டும்.

“டிஎபிக்கு எதிரான இன உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது போன்ற நேர்மைக்கு முரணான இகழத்தக்க சூழ்ச்சிகளைப் பயன்படுத்தக் கூடாது”, என்று குவான் எங் இடித்துரைத்தார்.