இறுதியில், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம்மைப் பதவி விலகச் சொல்லும் கோரிக்கைகளுக்கு நேரடியாகவே பதிலளித்துள்ளார். “ஒரு மனிதரின்” பொருட்டு பதவி விலகப் போவதில்லை என்றவர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதை ஆங்கில நாளேடான த ஸ்டார், ‘நான் பதவி விலக மாட்டேன்’ என்ற தலைப்பிட்டு முதல்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தது. நேற்று குவாந்தானில் பேசிய பிரதமர் மக்களின் ஆதரவு தமக்கிருப்பதாகக் கூறினார். அதனால், பதவி விலகல் கோரிக்கைக்கு அடிபணியப் போவதில்லை என்றார்.
“ஒரு மனிதர் கோருகிறார் என்பதற்காக நான் பதவி விலக வேண்டுமா? மாட்டேன்”, என்று நஜிப் குறிப்பிட்டதாக த ஸ்டார் கூறியது.
அந்த ஒருவர் யார் என்பதை நஜிப் குறிப்பிடாவிட்டாலும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரைத்தான் அவர் குறிப்பிடுகிறார் எனத் தெரிகிறது.
ஒரு மனிதரா? பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விட்டதாக எண்ணிக் கொள்ளுமாம். மலேசியாவே பிரதமரின் கையாலாகாத தனத்தையும், ஊதாரித்தனத்தையும், ஊழல்தனத்தையும் பார்த்து காறி துப்புது. ஒரு சில ஆயிர தே.மு. ஆதரவாளர்களை பணம் கொடுத்து கூட்டி வந்து கூட்டத்தைக் காட்டி விட்டால் “மக்கள் சக்தி” என்று ஆகி விடுமா என்ன?.
Mr PM,We are with you! expose mamak’s atrocities past 22 years..
சபாஷ் நஜிப்! இப்படித்தான் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என பேசவேண்டும். அடுத்த தேர்தல் வரை நீங்கள் ஆட்சி பீடத்தில் இருந்தால்தான் பக்காத்தானுக்கு புத்ராஜெயாவை நெருங்கும் வாய்ப்புக்கள் அதிகம்.
இத்தனை பேர் இங்கே எழுதுகிறோமே, எங்களைப் பார்த்தால் ‘ஒரு மனிதராகவா’ உங்களுக்குத் தெரிகிறது?
நஜிப் அவர்களே நீங்கள் எந்த R க்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்…. Rakyat க்கா அல்லது Rosmah விற்கா….. மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்…… மக்கள் பணம் எங்கே என்று கேட்டால்… மக்களின் ஆதரவை பற்றி சொல்கிறிர்கள்….சுல்தானின் ஆதரவை பற்றி சொல்கிறீர்கள்… பணத்தை கொண்டு எவ்வளவு காலம் ஆட்டம் போடுகிறீர்கள் என்று பார்ப்போம்.
இது போன்றவை மேற்கு நாடுகளில் நடக்குமா? நாம் தான் எப்போதும் மேற்கு நாடுகளை சாடுகிறோம் — இங்கு நடப்பது அடிமட்ட 3ம் உலக நடப்பும் கம்யுனிச நாடுகளில் நடப்பதும் .
நாஜிப் பதவி விலகுவது இரண்டாவது விஷயம். ஆனால் மகாதிர் சொல்லி விலகவேண்டும் எனும் பழக்கத்தை உடைக்க வேண்டும் இது பெரிய ஆபத்தை விளைவிக்கும். மகாதிர் நாஜிப்பை விலகச் சொல்வதன் காரணம் நாட்டை காப்பாற்ற அல்ல. தன்னையும் தன்னை சார்ந்த ஊழல் தலைவர்களையும் காப்ற்றவே இந்த தவிப்பு. இது அவனுக்கு வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம் ஆனால் மக்களுக்கு இது ஒரு சரியான வழியாக இராது. 30 மில்லியன் மக்களை கொண்ட நாட்டின் பிரதமரை முடிவு செய்யும் அதிகாரம் ஒருத்தன் கையில் இருக்கக் கூடாது.
RADIO கருத்தில் அர்த்தம் உள்ளது. அதற்காக நாஜிப்பை ஆதரிப்பாகாது.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .
எங்கள் உரிமைகளை பறித்த இவர்களின் பாரபட்ச அமைப்பு அழிவை நோக்கி செல்வது எங்களுக்கு இவர்கள் செய்த துரோகமே காரணம்.எங்களை பொறுத்த வரையில் இவர்கள் யாவரும் சுயநலவாதிகள்.இவர்கள் விதி பயன் ரஹ்மான் செயல் பாடுகளை இனி யாராலும் தடுக்க முடியாது..
நான் பொய்யே சொல்லவில்லை என்று ஒரூ பொய் சத்தியம் செய்து
விட்டால் பிரச்சனை தீர்ந்தது.ஏற்ப்பு
டையதாக இருந்தால் என் இலவச
ஆலோசனையை ஏற்ருக்கொள்ளபும்!;
மக்கள் பண தில் சொகுசு வாழ்கை ,வாழும் அம்னோ கரன் களுக்கு .கடவுள் ,விதித விதி ,அம்னோவின் சரித்திம் ஒரு முடிவுக்கு வரும் தருணம் இது .அது நடதெ ஆகும்,இபோது அதனுடைய தாக்கம்,செவன ,துவங்கி விட்டது.இனி நல்லது நாடாகும் என்று எதிர் பார்போம்.