தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹ்மட் ஷபரி சிக்-கின் உத்தரவுப்படிதான் தம் முன்னாள் எஜமானர் முகைதின் யாசினைத் தாக்குவதாக கூறப்படுவதை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் புவாட் ஸர்காஷி மறுத்துள்ளார்.
புதன்கிழமை முகநூல் பதிவு ஒன்றில் சாபா, கெனிங்காவில் தொடக்கப் பள்ளி மாணவர்கள் உடைந்த மேசைகளைப் பயன்படுத்துவதைக் காண்பிக்கும் படங்களைப் போட்டிருந்தார் புவாட்.
படத்தில் தெரியும் காட்சிக்குக் கல்வி அமைச்சின் இயலாமைதான் காரணம் என்று குறைகூறிய அவர் கல்வி அமைச்சரும் அவருக்குத் துணையாக உள்ள மூவரும் “தரை இறங்கிப் பார்க்காத சோம்பேறிகள்” எனச் சாடி இருந்தார்.
முன்பு கல்வி துணை அமைச்சராக இருந்த புவாட்டின் முகநூல் பதிவுக்கு ஷபரி சிக்-தான் காரணம் என முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின் தம்முடைய வலைப்பதிவில் குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், சைனுடினின் குற்றச்சாட்டு “பொய்” என்றுரைத்தார் புவாட்.
அதனால் என்ன! இனி மேல் ஏவலாள் ஆகி விடுங்கள்!