ஸாகிட்: முகைதின் வீடியோவை கசிய விட்டவருக்கு மன்னிப்பே இல்லை

 

zahidபகாங்கில் கடந்த சனிக்கிழமை  நடந்த அம்னோ உறுப்பினர்களுடனான பிரத்தியோக கூட்டத்தில் துணைப் பிரதமர் முகைதின் யாசின் ஆற்றிய உரையின் வீடியோ பதிவை கசிய விட்ட அம்னோ தலைவருக்கு மன்னிப்பே கிடையாது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறினார்.

அந்த அம்னோ தலைவரின் பெயரை வெளியிட மறுத்து விட்ட ஸாகிட் அவர் ஒரு தொகுதியின் துணைத் தலைவர் என்று மட்டும் கூறினார்.

“நான் அவருடன் தொடர்பு கொண்டேன். அவர் மன்னிப்பு கோரினார். ‘உனக்கு மன்னிப்பே கிடையாது’ என்று நான் பதில் அளித்தேன்.

“இழப்பு ஏற்பட்டு விட்டது. அவரது நடத்தைக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்”, என்று ஸாகிட் காஜாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.