பினாங்கு சிஎம்மைத் தற்காத்துப் பேசினார் அம்னோ எம்பி

mp reeஅம்னோ  உதவித்  தலைவர் அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்-கைச்  சாடியுள்ள  வேளையில்,  அம்னோ  எம்பி  ரீஸால் மரைக்கான்  அம்மாநிலத்தில்  அகதிகள்  முகாம்  அமைக்கும்  யோசனையைப்  பரிசீலிப்பதாக  லிம் கூறியிருப்பதை  பாராட்டினார்.

“பல  விவகாரங்களில்  நாம்  கருத்துவேறுபாடு  கொண்டிருப்பது  உண்மை, ஆனால் ரொகின்யா  அகதிகள்  விவகாரத்தில்  சிஎம்  லிம்  குவான்  எங்  வெளிப்படையாக  பேசியிருப்பது பாராட்டத்தக்கது”, என  ரீஸால் கூறினார்.

பினாங்கில்  அகதிகள்  முகாம்  அமைப்பதற்கு  லிம்  உடனடியாக ஒப்புக்கொள்ளாததற்காக  உள்துறை  அமைச்சர் அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  லிம்மைச்  சாடியிருந்தார்.

“தலைவர்கள் அகங்காரத்துடன்  நடந்துகொண்டு  அதிகாரத்தைக்  காண்பிக்க  இது  தருணமல்ல. அதை  ஒதுக்கிவைத்து  விட்டு  நெருக்கடியை  மனிதாபிமான  முறையில்  அணுகுங்கள்.

“ரொகின்யாக்கள்  பரிதவிக்கிறார்கள். சொந்த  நாட்டில்  அவர்களின்  நிலைமை  இன்னும்  மோசமாகவுள்ளது”, என  ரீஸால்  குறிப்பிட்டார்.