சரவாக் ஆளுனர் அப்துல் தாயிப் மஹ்மூட்டுக்கு- கோலாலும்பூரில் இருக்கும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக- விலையுயர்ந்த புதுக் கார் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஒரு 2012 ரோல்ஸ் ரோய்ஸ் ஃபெண்டம்.
அதுவே தாயிப்பின் அதிகாரத்துவ காராம். அந்தரங்க விசயங்களை அம்பலப்படுத்திவரும் சரவாக் ரிப்போர்ட் இணையத்தளம் கூறியுள்ளது.
அது சரவாக் முதலமைச்சரான அடினான் சாதேம் தாயிப்புக்கு வழங்கிய “பரிசு” என்று அந்த இணையத்தளம் கூறிற்று.
அந்தக் காரின் விலை பிரிட்டனில் GBP365,000 (ரிம2 மில்லியன்) ஆனால் மலேசியாவில் ஆடம்பர கார்களுக்கு வரி அதிகம் என்பதால் இங்கு அதன் விலை இன்னும் அதிகமாக இருக்கும்.
இங்கு பயன்படுத்தப்பட்ட 2012 ரோல்ஸ் ரோய்ஸ் ஃபெண்டம் கார்கூட ரிம3.7 மில்லியனுக்கு விலை போவதாக சரவாக் ரிப்போர்ட் தெரிவித்தது.
“பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும் பழக்கம் தாயிப்புக்குக் கிடையாது”, என்றும் அது குறிப்பிட்டது.
இது மலிவான கார் தானே .
அனுபவி ராஜா! அனுபவி!. கூடவே கோட்டானும் அலறுது!. அனுபவி ராஜா அனுபவி!.
இருக்கறவன் அனுபவிக்கிறான் .. இல்லாதவன் போலம்புறான்
தேனீ அவர்களே ! சமீபத்தில் நான் சரவாக் மாநிலம் சென்று வந்தேன் . அங்கு குடியிருக்கும் மண்ணின் மைந்தர்களிடம் இவனை பற்றி விசாரித்தேன். சரவாக் மாநிலத்து அரசியல் அமைப்பு இவனுக்கு மிகவும் சாதகமாக இருக்கிறதாக அவர்கள் சொல்கிறார்கள் !! ( kekebalan dari undang -undang ).
ஆமாம் இவரு மக்களுக்காக உழைத்தவர் அதனாலே இதெல்லாம் தேவைதான் .
பிரிட்டிஷ் காலத்தில் இவன் சாதாரண பீல்ட் ஆபிசர்,,,,, இன்று ,,,, ஆளுநர் ,,,,
//2012 ரோல்ஸ் ரோய்ஸ் ஃபெண்டம் சரவாக் முதலமைச்சரான அடினான் சாதேம் தாயிப்புக்கு வழங்கிய “பரிசு” என்று அந்த இணையத்தளம் கூறிற்று.//
பரிசாம் பரிசு, அவனவன் சொந்தப் பணத்தில் வாங்கினால்தானே பரிசு, இது மக்களின் வரிப்பணத்தில் வாங்கியது தானே. சொந்தப் பனம் என்றால் ஒரு ஓட்டை சைக்கிள் கூட வாங்கித்தந்திருக்கமாட்டான் இந்த ஆடம்பரப் பிரியன்.