1மலேசியா மேம்பாட்டு நிறுவன (1எம்டிபி)த் தலைவரும் செயல்முறை இயக்குனருமான அருள் கந்தசாமி நாளை பொதுக் கணக்குக்குழு(பிஏசி)க் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்.
அருளும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஷாரோல் ஹல்மியும் சந்திப்பைத் தள்ளிப்போடுமாறு கேட்டுக்கொண்டிருப்பதாக சில வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன.
பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட் அது பற்றி இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் மேலும் விவரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“பிஏசி” பல்லில்லா பாட்டி!.இந்த 1MDB வைத்து எத்துனை மினி சீரியல்தான் போடுவார்களோ தெரியவில்லை. அதற்குள் சில ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி விடும், பல ஆவணங்கள் காணாமல் போய் விடும், அப்புறம் நம்பிக்கை நாயகனே காணாமல் போய் விடுவார் பாருங்களேன்!.
இருவருக்கும் இன்னும் நஜிப்பிடமிருந்து பச்சைவிளக்கு கிடைக்கவில்லை போலும். பொய்யும் பித்தலாட்டமும் பகல் கொள்ளையும் இவர்களின் நிபுனத்துவமோ என்று எண்ணத் தோன்றுகிறது!!!!
மலேசியாவின் செவாலியர் சிவாஜி கணேசன் பட்டத்துக்கு மிகவும் தகுதியானவர் இவர்தான். நல்லா வருவடா நீ……….
எனக்கு என்னமோ, இந்த அருள் கந்தசாமி ஒரு பலியாடு போல் தெரிகிறது !!! ஹி…ஹி …ஹி ..முனியாண்டி சாமி கோவில் ஆட்டுக்கறி சோறு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி .யாராவது உங்கள் ஊர் அக்கம் பக்கத்துலே இருக்கும் முனியாண்டி கோவிலில் கிடா வெட்டினால் சொல்லி அனுப்புங்கோ !!!!!!!!
மாஇகா தலைவர் பதவிக்கு தேர்வு பண்ணலாம். இப்போ இருக்கும் அதுவும் முன்னால் தலைவரை மிஞ்சி விடுவார். நல்ல
ஜோக் காக இருக்கும். தில்லு முள்ளு பண்ண நல்ல தலைவராக வருவார். வாழ்க தமிழ் சமுதாயம்.
அருள் தம்பி நஜிப்பின் ஆள் இல்லை ! அல்ராஜிவ் கருவூலம் நியமித்த நபர் ! அவர் எப்போது வேண்டும் என்றாலும் விளக்கம் சொல்வார் , தடுப்பது யாராக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும் !