பாஸ் கட்சியில் தேர்தல் நடப்பதையொட்டி பக்கத்தான் ரக்யாட்டில் மூன்று வாரங்களுக்கு “அமைதி காக்க வேண்டும்” என பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார்.
“பக்கத்தானைப் பாதுகாக்க நிலைமையை ஆறப்போடுவதுதான் சிறந்த வழி.
“இரண்டு மூன்று வாரங்கள் அமைதி காத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் அவாக்களையும் நினைத்துப் பார்ப்போம்”, என்றாரவர்.
பக்கத்தான் ஒரு கூட்டணியாக தொடர்வதையே மக்கள் விரும்புகிறார்கள்.
“பாஸ் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், நாம் எதற்காக ஒன்றாக இருக்கிறோம் என்கிற பெரிய நோக்கத்தை மறந்து விடக்கூடாது”,என ரபிஸி கூறினார்.
பாஸ் தேர்தல்கள் ஜூன் 4-இலிருந்து 6வரை நடைபெறுகின்றன. அதில் அப்துல் ஹாடி ஆவாங் மிகப் பெரிய வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்துல் ஹாடியின் கொள்கைகள் அண்மையில் டிஏபி, பிகேஆர் ஆகியவற்றின் குறைகூறலுக்கு இலக்காகியுள்ளன.
பக்காத்தானின் ஒருமித்த முடிவுக்கு எதிராக செயல்பட்ட பாஸ் கட்சி தலைவரை எப்படி ஏற்றுக்கொள்வது??? நயவஞ்சக நரியுடன் தொடர்பு கொள்வதைவிட முறிவே மேல்!!!!. பக்காத்தானின் கொள்கையில் நம்பிக்கை உள்ள பாஸ் கட்சியினர், நிச்சயமாக ஹாடியை எதிர்த்து பக்காத்தானுக்கு ஆதரவு கொடுப்பார்… பாஸ் கட்சி இரண்டாக பிரியுமே தவிர, பக்காத்தான் நிலைப்பது உறுதி!!!
தலை இல்லாத காரணத்தால் வாழ்கல் ஆடுகிறது.உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசை படுகிறேன் மக்கள் முட்டாள்கள் அல்ல தெளிந்த சிந்தனை யோடு இருக்கிறார்கள் முக்கால் வாசிபேர்.நீங்கள் உண்மையை பேசவேண்டும்,மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் இதை தான் நாங்கள் எதிர் பார்க்கிறோம் பார்த்து நடந்து கொள்ளுங்கள்..
இந்த ரபிசி [பி.கே.ஆர்.] பக்குவப்பட்ட அரசியல்வாதியைப் போல பேசுகிறார். நன்றி. ஆனால் லிம் குவான் எங்[டி.எ.பி.] அப்படியல்ல. பினாங்கு நாற்காலி கவிழாமல் இருந்தால் போதும். மற்றவர்கள் எக்கேடு கேட்டால் என்ன என்கிற சுயநல பாதையில் போகிறார். இந்த லிம் குவான் எங், மலாக்கா மாநில டி. எ.பி. யிலிருந்து தூக்கி எறியப்பட்டவர். அம்மாநில டி.எ.பி.தேர்தலில் தோற்றுப் போனவர். அப்பனின் தயவால் பினாங்கில் குடியேறி அங்குள்ள பல சிறந்த டி.எ.பி தலைவர்களை பின்னுக்கு தள்ளி, சி.எம். நாற்காலியை கைப்பற்றியவர். இவரின் சர்வாதிகார போக்கினால் வடக்கு மாநிலங்களைச் சேர்ந்த அனேக டி.எ.பி தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். எது எப்படியோ, பக்கத்தானை உடைக்காமல் இருந்தால் சரி.
மக்கள் கூட்டனி மலேசியர்களின் எதிர்காலம். நய வஞ்சக வலையில் விழுந்து உடைதுவிடாதிர்கள் பாஸ் கட்சியினரே .
பினாங்கின் அபரித வளர்ச்சி எங்களுக்கு தான் தெரியும் . ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது .
பக்காத்தான் தலைவர்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல. கூட இருந்தே குழிபறிக்கும் நயவஞ்சக தலைவர்களை மட்டும் தூக்கி எறிந்தால் போதுமானதே!!!! பிறகு புத்ராஜயாவை நோக்கி வெற்றி நடை போடலாம்!!!!
நண்பர் சிங்கம் கூறியது மிகச்சரியே. தற்போது பினாங்கில் வீட்டுமனைகளின் விலையைக் கேட்டாலே தலை கிறுகிறுத்துப்போகும், தரத்தை உயர்த்துகிறார்களாம், அத்தனை விலைவாசி ஏற்றம், குவான் எங் நினைத்தால் GST குறித்து மறுமுடிவு செய்திருக்க இயலும், செய்யவில்லை. வாய்ப்பேச்சு மட்டுமே. போகிற போக்கைப் பார்த்தால், சீனர்களைத்தவிர பிற இனங்கள் சமாளித்து வாழ இயலாத வகைக்கு பினாங்கின் போக்கு அமைந்துவிடும் போலிருக்கிறது. ஆரம்பத்தில் “மக்கள் சக்தி, மக்கள் சக்தி” என்று ஆர்ப்பரித்து இந்தியர்களின் ஓட்டுகளை யாசித்த இவர்கள் அதன் பின்னும் இந்தியர்களின் நிலைமையில் கவனம் கொள்வது சிறப்பு. இல்லையேல் அடுத்த தேர்தல் இவர்களுக்கு ஆப்பாகவே அமையும்.
பினாங்கில் அதிகப்படியான குளறு படிகள் உள்ளதாக போலிசின் குற்றபுலனாய்வு புலப்படுத்துகிறது.போதை பொருள் கடத்தல்,விடியோ கேம்,குண்டர் கும்பல்,விபச்சாரம் போன்ற அதிகமான குற்ற செயல் கண்டுபிடிக்க பட்டு உறுதிபடுத்த பட்டுள்ளது.ஆட்சியே சரில்லை.
அடுத்த தேர்தலுக்குள் மலேசியாவில் என்றென்றும் ஒரே எதிர் கட்சி தனித்தே செயல் படும் அபாயம் மீண்டும் வரலாம்.
பினாங்கில் ஒடுக்கப்பட்ட இந்திய சமுகத்திற்கு சிறப்புத் திட்டம் ஏதும் இல்லையே