அருள் கந்தா கந்தசாமியை உடனடியாக நீக்க வேண்டும், ரபிஸி

 

sack kanda1மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டின் (1எம்டிபி) தலைவரும் செயல்முறை இயக்குனர் அருள் கந்தா கந்தசாமி மற்றும் அதன் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி ஷாருல் ஹமிலி ஆகிய இருவரும் நாளை நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் (பிஎசி) கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்ற அவர்களின் முடிவு ஓர் அவமதிப்பு ஆகும் என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரமலி கூறுகிறார்.

இதற்காக அருள் கந்தா கந்தசாமி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றாரவர்.

இது நகைப்புக்குரியது. இதற்கு முன்னதாக அவர்கள் பகிரங்கமாக முன்வந்து விளக்கம் அளித்து உண்மையை நிலைநிறுத்தி இருக்க வேண்டும்.

“ஆனால், இப்போது அவர்கள் பிஎசி கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்திருப்பது இறுதி அவமதிப்பாகும். (அருள்) உடனடியாக நீக்கப்பட வேண்டும்”, என்று ரபிஸி இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியில் கூறினார்.

உலகின் வேறு எந்த நாடாளுமன்றத்தின் பிஎசி போன்ற உச்சநிலைக் குழு ஆணை விடுத்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் கூட்டத்திற்கு வந்தாக வேண்டும் என்றாரவர்.

மூன்று வாரங்களுக்கு முன்பு அழைப்பு விடுக்கப்பட்டது

போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தும் அந்த இருவரும் கூட்டத்திற்கு வராததற்காக நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா அவர்களைச் சாடினார்.

மூன்று வாரங்களுக்கு முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தும் இவ்விரு நாள்களிலும் அந்த கோமாளிகள் வெளிநாட்டில் இருப்பர் என்று கூறிக்கொண்டுள்ளனர் என்று டோனி டிவிட்டர் செய்துள்ளார்.

நாளை நடைபெறவிருக்கும் பிஎசி கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்ற அவர்களின் முடிவு பிரதமர் நஜிப்பின் sack kanda1உத்தரவின்படிதான் நடந்திருக்க வேண்டும் என்று ரபிஸி ஊகிக்கிறார்.

“தலைமைத்துவம், அதாவது நஜிப், அவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதை விரும்பவில்லை.

“ஏனென்றால், பிஎசியின் முன் நிறுத்தப்பட்டால் கேள்விகளைக் கையாள முடியாத நிலை ஏற்படலாம் என்பதோடு இன்னும் பல விசயங்கள் வெளிவரலாம் என்ற அச்சம் இருக்கிறது.

“அதனால்தான் நஜிப் மக்களின் சினத்தையும் பொருட்படுத்தாமல் இவர்களை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கும் செயலில் துணிந்து இறங்கியுள்ளார்”, என்று ரலிஸி மேலும் கூறினார்.

தற்போது, பிஎசி 1எம்டிபியின் கணக்குகளை அலசி ஆராய்ந்து வருகிறது. பெரும் கடனில் சிக்கியிருக்கும் 1எம்டிபியில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பதைக் கண்டறிவது அதன் நோக்கமாகும்.

பிஎசி அதன் விசாரணையை மே 19 இல் தொடங்கியது. இதுவரையில் அக்குழு கஜனாவின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிஹர் அப்துல்லா மற்றும் பொருளாதார திட்டப் பிரிவின் தலைமை இயக்குனர் ரஹமாட் பிவி அப்துல்லா ஆகியோரை விசாரித்துள்ளது.