பிரபல கேக் தயாரிப்பு நிறுவனமான சீக்ரெட் ரெசிபிக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழை மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்) இரத்துச் செய்துள்ளது.
அதே வேளையில், ஹலாலற்ற பொருள்களை அந்நிறுவனம் பயன்படுத்தவில்லை என்பதையும் ஜாக்கிம் விளக்கியுள்ளது.
“சுத்தக்குறைவு, சரியான தயாரிப்புமுறை கடைப்பிடிக்கப்படாமை ஆகியவையே ஹலால் சான்றிதழ் இரத்தானதற்குக் காரணம்.
“பொருள் தயாரிப்பில் ஹராமான பொருள்கள் பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக ஹலால் சான்றிதழ் இரத்துச் செய்யப்படவில்லை”, என ஜாக்கிமின் ஹலால் பிரிவு இயக்குனர் ஹகிமா முகம்மச் யூசுப் கூறினார்.
‘Secret Recipe’ – யை கொடுக்க மறுத்ததால் இரத்தாகியதோ?.
என் கண்மணி
தேனீ இது அதுக்கும் மேலே! சீக்ரெட்டா கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சரிக்கட்டும் சீக்ரெட் “சீக்ரெட் ரெசிபிக்கு “தெரியலை போலிருக்கு 🙂
குளறு படியான விளக்கம் இது.