தாய்லாந்து- மலேசிய எல்லையில் புதைக்கப்பட்டிருக்கும் நூறுக்கு மேற்பட்டவர்களின் இறப்புக்கு மலேசியா அமலாக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்திருக்கலாம் அல்லது பொறுப்பாளர்களாகவும்கூட இருக்கலாம் என உள்துறை அமைச்சு சந்தேகிக்கிறது.
மலேசிய அதிகாரிகள் குடியேறிகளைக் கொன்றிருக்கும் சாத்தியம் அல்லது அவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருக்கும் சாத்தியம் உண்டா என்று வினவப்பட்டதற்கு “உண்டு” என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“இன்னும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். எந்தச் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை”,என ஜாஹிட் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கொலைகளில் அதிகாரிகள் மட்டுமல்ல, அரசாங்கமே சம்பந்தப் பட்டிருந்தாலும் ஆச்சர்யப் பட ஒன்றுமில்லை. 1970 களின் மத்தியில் வியட்நாம் போர் நடந்திட்ட வேளையில், அங்கிருந்த ஆயிரக்கணக்கில் படகு மக்கள் தப்பி மலேசிய கரையோரங்களில் [குறிப்பாக திரெங்கானு, பூலாவு பெர்ஹெந்தியான்] தஞ்சமடைந்தனர். அவர்களை கரையினுள் சேரவிடாமல், நடுக்கடலிலேயே சுட்டுக்கொன்று, கடல் நீரை சிவப்பு நிரமாக்கியது நமது கடற்படை. இது குறித்து லிம் கிட் சியாங் அன்றைய நாளில் பல முறை கேள்வி எழுப்பியிருந்தார். விடைதான் கிடைக்கவில்லை.
வேலியே பயறை மேயும் போது பஞ்சமா பாதகங்கள் எங்கும் தலைவிரித்து ஆடுகிறது !
மனிதனின் உயிர் மதிக்கத்தக்கது அதை இவ்ளோ சர்வ சாதாரணமாக கொற்று இருக்கின்றநேரே
அப்படியென்றால் MH 370 தில் இருந்தவர்கள் 249 மனிதர்கள் எங்கே ?
யாரப்பா அங்கே? அமலாக்க அதிகாரிகளில் யாரேனும் தமிழன் இருக்கிறானா? இருந்தால் தயாராக இருங்கள்!
ITHU PALAIYA கதையாச்சே தெரிந்த விசியயம்தானே
ஐக்கிய நாட்டு சபை வெறும் காகித புலி– அத்துடன் வங்காள தேச அரசாங்கம் கையால் ஆகாத மட்ட ரக அரசு.
மனித நேயமே அற்றுப்போன அரக்கர்களிடம் ஆதரவையும் அனுதாபத்தையும் எதிர்ப் பார்க்கமுடியுமா..?
இருக்கலாம் அல்ல, இருக்கும்.
அமைச்சர் இப்படி பகிரஙமாக ஒப்புக்கொண்டதே ….. பெரிய விசியம் தானே !!!
மு.த. நீலவாணன் அவர்களே ! அமைச்சர் பகீரங்கமாக ஒப்புக்கொண்டதால் பாராட்டிவிடாதீர்கள், அடுத்த நாடு ஏதாவது கண்டுபிடித்து சொல்லிவிட்டால் இன்னும் பிரச்சனையாகிவிடுமே என்ற பயத்தில் நல்லவன் போல ஒப்புக்கொண்டுவிட்டான், அவ்வளவுதான் ! இந்த அமைச்சன் பெரும்பாலும் மூலையை பாவிக்காமல் பேசுவதில் வல்லவன் !!
இவன் ஒரு மட கு mahadevan
பணம் ,,,, பணம் ,,, இன் நாட்டில் எதுவும் சாத்தியம் ,,,,,
உண்மை ஓரளவுக்கு அம்பலமாகிவிட்டது, அண்டை நாடுகளின் மத்தியில் நாட்டின் பெயரும் நாறிவிட்டது..!