பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சொந்தக் கட்சிக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்பதால் அவர் திடீர் தேர்தலை நடத்திப் புதிய அதிகாரத்தைப் பெறுவது அவசியம் என்கிறார் எதிரணி எம்பி ஒருவர்.
அப்படிச் செய்வதன்வழி நஜிப், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் உள்பட அவரைக் குறைகூறுவோரின் வாயை அடைக்க முடியும் என காலிட் சமட்(பாஸ்- ஷா ஆலம்) கூறினார்.
“பிரச்னை என்னவென்றால், எதிரணியினர், மக்கள் ஆகியோரின் நம்பிக்கையை மட்டுமா பிரதமர் இழந்திருக்கிறார், சொந்தக் கட்சிக்குள்ளும் நெருக்கடியை எதிர்நோக்குகிறார்”, என மக்களவையில் 11வது மலேசிய திட்டம்மீது வாதமிடும்போது காலிட் கூறினார்.
“இதற்குத் தீர்வு காண ஒரே ஒரு வழிதான் உண்டு. நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்துங்கள். மகாதிரின் வாயை அடக்க இது ஒன்றே வழி”, என்றாரவர்.
பாஸ் அம்னோவுக்கு வக்காலத்து வாங்குரனுங்க மாமனும் மச்சானும் ஆயிடணுங்க வரும் தேர்தலில் அம்னோவுடன் கூட்து சேர்ந்து 15 உறுப்பு கட்சி ஆயி போட்டிபோடும். வாழ்க பாஸ் வாழ்க அடி அவங்
சா ஆலாம் எம்பி காலிட் சொல்வதுப்போல் நாட்டின் பொதுத் தேர்தலை வைத்து நஜிப் தனது ஆதரவை நிருபித்தால் ஒருவேளை மகாதிர் அடங்கி போகலாம்..? அதோடு தேர்தலில் பாஸ் கட்சியின் தலைவிதியும் தெரிந்து விடும்…!
ஆமாம் ஆமாம் அதுவும் சரிதான்.
மாண்பு மிகு காலித் சமாட் மகாதீர் வாயை அடக்க வழி சொல்கிறாரா ? அல்லது பிரதமர் நாஜிப் மூட்டை கட்டிக்கொண்டு வீட்டிற்கு போக வழி காட்டுகிறார ?
பொதுத்தேர்தல் நடத்தினால் உங்கள் கட்சிக்கும் ஆப்பு. முதலில் அதை சரிசெய்யுங்கள். உங்கள் கட்சியிலே குள்ளநரிகள் நிறைய உலாவருகிறது , அதை கட்டுபடுங்கள்.
நேரிடியாக சொல்லாமல் மறைமுகமாக அறிவிக்கிறார் “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்”!