எம்ஏசிசி: பெல்டா லண்டனில் ஹோட்டல் வாங்கியதில் தவறில்லை

lowமலேசிய  உழல்தடுப்பு  ஆணையத்தின்  தொடக்க  நிலை ஆய்வில்  பெல்டா  நிர்வாகம்  ரிம538 மில்லியன்  கொடுத்து  லண்டனில்  ஆடம்பர  தங்கும்  விடுதி  வாங்கியதில்  ஊழல்  நிகழ்ந்திருப்பதாகத்  தெரியவில்லை.

“எம்ஏசிசி-இன்  தொடக்கநிலை  ஆய்வுகளில்  2009  மலேசிய  ஊழல்தடுப்புச்  சட்டத்தின்படி  குற்றம்  எதுவும்  நிகழ்ந்திருப்பதற்கான  சான்றுகள்  காணப்படவில்லை”, எனப்  பிரதமர்துறை  அமைச்சர் பால்  லவ்  நாடாளுமன்றத்தில்  வழங்கிய   எழுத்துப்  பூர்வமான  பதிலில்  கூறினார்.

இவ்விவகாரம்  தொடர்பில்  கூடுதல்  தகவல் அல்லது  சான்று  வைத்திருப்பவர்கள் மேல்நடவடிக்கைக்காக  அதை  ஆணையத்திடம்  கொடுக்க  வேண்டுமென்று அவர்  கேட்டுக்கொண்டார்.