சரவாக் ஆளுனர் அப்துல் தாயிப் மஹ்மூட் பயன்படுத்தும் 2012 ரோல்ஸ்-ரோய்ஸ் ஃபெண்டம் கார் அரசாங்கம் வாங்கிக் கொடுத்தது அல்ல என அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார்.
ரிம3.7மில்லியன் மதிப்புள்ள அக்காருக்கு அரசாங்கம் பணம் கொடுக்கவில்லை..
சரவாக் ரிப்போர்ட்-டில் வெளிவந்துள்ள செய்தி பற்றிக் கேட்டதற்கு, “அது எனக்கே ஒரு புதிய செய்திதான்”, என்று ஷஹிடான் தெரிவித்தார்.
ஆளுனர்கள் பயன்படுத்துவதற்காக அரசாங்கம் ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள் வைத்திருப்பதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.
“எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் இல்லை”, என்றாரவர்.
பிபிபி கட்சியின் உதவித் தலைவர் ஹஸ்பி ஹபிபுல்லாவிடம் கேட்டதற்கு அது பற்றிக் கருத்துரைக்க அவர் விரும்பவில்லை. கூச்சிங்கில், தாயிப்பின் வீட்டில் ரோல்ஸ்-ரோய்ஸ் காரை எதையும் கண்டதுண்டா என்ற கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்தார். தாயிப் பிபிபி கட்சியின் முன்னாள் தலைவர்.
அவன் காரயும் ஓட்டுவான் போண்டட்டியும் ஓட்டுவான் நமக்கு ஒரு லாபமும் இல்ல.