எந்த ஒரு சுல்தானுடைய பெயரிலும் அத்தகைய அவமானமான மருட்டல்கள் விடுக்கப்படுவதை விட நமது அரசியலமைப்புக்கு உட்பட்ட சுல்தான்களுக்கு பெருத்த அவமானம் வேறு ஏதுமில்லை.
பேராசிரியர் அஜிஸ் பேரிக்கு அஞ்சலில் துப்பாக்கித் தோட்டா
கலா: அதனை அனுப்பியவருக்கு அந்த அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி வசிக்கும் இடம் நன்கு தெரிந்துள்ளது.
அதனை அனுப்பியவர் யாராக இருக்க முடியும்? நிச்சயமாக அந்த நபர் அஜிஸை எதிர்ப்பவராக இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட அரசியலமைப்பு விஷயங்களை சுல்தானுக்கு நினைவூட்டப்படுவதை விரும்பாதவராக இருக்க வேண்டும்.
என்னைக் கேட்டால் அப்துல் அஜிஸ் தம்மைப் போன்ற சிந்தனை கொண்ட சிலரைச் சேர்த்து ஒரு வட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். தனித்து நின்று போராடுவது விவேகமானது அல்ல. நடைமுறைக்கு ஏற்றதும் அல்ல.
குழப்பம் இல்லாதவன்: இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது ? ஒரு முக்கியமான விஷயம் மீது சட்ட ரீதியான கருத்தைத் தெரிவித்த பேராசிரியர் ஒருவருக்கு அஞ்சலில் துப்பாக்கித் தோட்டா அனுப்பப்பட்டுள்ளது.
அவர் அரசர் அமைப்பு முறையை நிந்திக்கவில்லை. தார்மீக ரீதியில் திவாலான பிஎன், டாக்டர் மகாதீர் முகமட் ஆட்சியில் இதை விட மோசமாக செய்துள்ளது. அதுவும் ஒர் இஸ்லாமிய நாட்டில்.
பிராஹ்மான்: சட்ட விரோதமாக சுடும் ஆயுதங்களையும் தோட்டாக்களையும் வைத்திருக்கின்றவர்களுக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்பட்டும் இந்த நாட்டில் அஞ்சலில் அனுப்பப்படும் அளவுக்கு தோட்டாக்கள் நிறையக் கிடைப்பதாகத் தோன்றுகிறது.
மலேசியாவில் அவற்றை வாங்குவது எளிதல்ல. ஆகவே அந்த விஷயத்தில் அதிகார வர்க்கத்தில் உள்ள சில தரப்புக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாமோ என்ற ஐயம் எழுகிறது.
பல இனம்: சிலாங்கூர் சுல்தான் அமைதியாக இருக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். அஜிஸ் பேரிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை அவர் கண்டிக்க வேண்டும்.
சுல்தான் அதனைச் செய்தால் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை அது உணர்த்தும்.
அரசியல்வாதிகளுக்கு மேலாக தம்மைக் காட்டிக் கொள்வதற்கும் அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும்.
மாநில ஆட்சியாளர் என்ற முறையில் இனம், சமய வேறுபாடு கருதாமல் சிலாங்கூருக்கும் அதன் மக்களுக்கும் எது நல்லது என்பதில் அவர் முழு அக்கறை காட்ட வேண்டும்.
அனைத்து மலேசியர்களுடைய மரியாதையையும் ஆதரவையும் அரசர்கள் மீண்டும் பெறுவதற்கு இதுவே தக்க தருணம்.
ஒரு மூளை அணு: சுல்தானைப் பற்றி அஜிஸ் பேரி என்ன சொல்லியிருந்தாலும் அந்த நாகரிகமான முறையில் கூறப்பட்டதாகும். அஞ்சலில் துப்பாக்கி தோட்டாவை அனுப்புவது தரக் குறைவான குண்டர்தனம்.
எந்த ஒரு சுல்தானுடைய பெயரிலும் அத்தகைய அவமானமான மருட்டல்கள் விடுக்கப்படுவதை விட நமது அரசியலமைப்புக்கு உட்பட்ட சுல்தான்களுக்கு பெருத்த அவமானம் வேறு ஏதுமில்லை.