1மலேசியா மேம்பாட்டு நிறுவனத் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) அருள் கந்தாவும் முன்னாள் சிஇஓ ஷாரோல் ஹல்மியும் பொதுக் கணக்குக் குழுவிடம்(பிஏசி) சாட்சியம் அளிக்காமல் எங்கே சென்றார்கள் என அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டோனி புவா வினவினார்.
“பிஏசி சாட்சியம் அளிக்க வருமாறு கூறியிருக்க மே 25, 26-இல் அவர்கள் எங்கு சென்றனர்? பிஏசி-யைச் சந்திக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டில் அப்படி என்ன கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்?”, என்றவர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது கேள்வி எழுப்பினார்.
பாவம் அருள் கந்தாவும் ஷாரோல் ஹல்மியும், தங்கள் எஜமானரையோ அல்லது எஜமானரின் மனைவியையோ மனம் குளிர வைக்க ஒரு விலையுயர்ந்த மோதிரம் பரிசளிக்கலாம் என்று வெளிநாட்டில் மோதிரம் வாங்க சென்ற இந்நேரத்தில் இப்படி சங்கடமான கேள்விகள் தேவையா ? டோனி புவா !
இவ்விருவரின் வக்கீலான பிரதமரிடம் கேளுங்கள் இந்த கேள்வியை!!!!
எப்போது இவர்களுக்கான சாட்சியம் அளிக்கவேண்டிய மனு கொடுக்கப்பட்டது, எப்போது இவர்கள் வெளிநாட்டுக்கான விமான சீட்டுக்கு மனு செய்தனர் என்பதையும் விசாரிக்க வேண்டும்!!! YB டோனி புஆவின் கேள்வியில் பல மர்மம் அமைந்துள்ளது!!!