பத்தாவது மலேசிய திட்டத்தில் விவரிக்கப்பட்ட திட்டங்களில் சுமார் 40 விழுக்காடு இன்னும் முழுமையாக அமலாக்கப்படவில்லை.
10வது மலேசிய திட்டம் சாதித்தது என்ன என்று அறிந்துகொள்ள விரும்பிய ரந்தாவ் பாஞ்சாங் எம்பி-க்குப் பிரதமர்துறை இவ்வாறு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
10வது மலேசியத் திட்டத்தின்படி இவ்வாண்டு மே 11வரை 11,894 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார்.
இவற்றில் 61.5 விழுக்காட்டுத் திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன. 38.5 விழுக்காடு “அமலாக்கத்தின் பல்வேறு கட்டங்களில் உள்ளன”.
“எஞ்சியுள்ள 38.5 விழுக்காட்டுத் திட்டங்களும் அடுத்த ஐந்தாண்டுகளில் முடிக்கப்படும்”, என ஷாஹிடான் தெரிவித்தார்.
இப்படி 40% 10-ம் மலேசிய செயல் திட்டங்களை முடிக்காமலேயே அடுத்த 5 ஆண்டு கால திட்டத்தை கொஞ்சமும் வெட்கமில்லாமால் அறிமுகப்படுத்துகின்றார்களே. இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் உப்பு போட்டுதான் சோறு சாப்பிடுகின்றார்களா?.
இந்த பத்தாவது திட்டம் முடிவடைகிறதோ இல்லையோ, இத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக முடிந்திருக்குமே!!!!! வல்லவர்கள் அல்லவா நீங்கள்!!!!
எத்தனை திட்டங்கள் வந்தாலும் , நிறைவேறுவது அம்னோ தலைவர்களின் பணத்தை சுருட்டும் கனவுதான். மக்களுக்கு பெப்பே…இந்நேரம் மந்திரிங்கள் எல்லாம் 11 வது பொருளாதார திட்டத்தில் எப்படி திட்டம் தீட்டி கொள்ளையடிப்பது என தீவிர திட்டம் வரையப் பட்டு கொண்டிருக்கும்.
james -சொல்வது தான் எப்போதும் நடப்பது.
நாட்டை திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது ,,,,,,
பல திட்டம் போட்டு திருடுற கூட்டம் நம் நாட்டு அரசியலில் பெருகிக் கொன்டு போகுது அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டமும் ஊழல் பெருச்சாளிகளுக்கு சலாம் வைத்து, சிங் சாக்னு சால்ரா போட்டுக்கிட்டு அவர்களுக்கு வாலாட்டிக்கொன்டுதான் இருக்குது.