புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் முகம்மட் ஷாபி அப்டால், 1எம்டிபி விவகாரத்துக்கு அமைச்சரவை மொத்தமும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறப்படுவதை நிராகரித்தார்.
அமைச்சரவைக் கூட்டங்களில் அமைச்சர்கள் 1எம்டிபி பற்றிக் கேள்வி கேட்கத் தவறியதில்லை என்று ஷாபி கூறினார்.
“நாங்கள் பொறுப்பான அமைச்சர்கள். அதனால்தான் கேள்வி கேட்டோம்….. எங்களுக்கும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருந்தது”.
அந்நிறுவனம் தொடர்பில் சில விவகாரங்கள் அமைச்சரவைக்கே புரியவில்லை என்றாரவர்.
“எங்களுக்குச் சரியாக புரியாத ஒன்றுக்காக எங்களைக் குறை சொல்லக்கூடாது”, என்றார்.
1எம்டிபி பிரச்னைகளுக்கு அமைச்சரவை மொத்தமும் பொறுப்பு என்று முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது ஷாபி இவ்வாறு கூறினார்.
‘1MDB தொடர்பில் சில விவகாரங்கள் அமைச்சரவைக்கே புரியவில்லை’ என்றால் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது யார் ஆறறிவு மனிதர்களா ? ஐந்தறிவு எருமைகளா ?
இப்படியும் ஒரு மூத்த மந்திரி பேசலாமா? இதற்கு என்ன அர்த்தம்?. எங்கள் கையில் ஒன்றும் இல்லை என்பதுதானே பொருள்!. எல்லாம் நம்பிக்கை நாயகன் செயல் என்று கையை விரித்தால் உடனே அமைச்சரவையில் இருந்து பதவி இராஜினாமா செய்யுங்கள். அதை விடுத்து உங்களுக்கு என்ன வேலை?.
நீங்கள் கேட்ட கேள்வியில் பிரதமர் திக்குமுக்காடி மூத்திரமே அடித்துவிட்டார் போலும்!!!! போங்கடா போக்கத்தவன்களா!!!!