மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, சர்ச்சைக்குரிய 1எம்டிபி கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அடக்கி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.
நாடாளுமன்றச் சீரமைப்புப் பற்றிப் பேசும் பண்டிகார் இவ்விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
“பண்டிகார் தலையிட்டு 1எம்டிபி-இன் ரிம42 பில்லியன் ரிங்கிட் ஊழல் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கும் பிரதமர் நாடாளுமன்ற நிலை ஆணைகளை மீறினாரா என்று தீர்ப்பளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதுவே மலேசியாவில் நாடாளுமன்றச் சீரமைப்பை நோக்கி எடுத்து வைக்கப்படும் முதல் அடியாக இருக்கும்”, என்று லிம் ஓர் அறிக்கைப்யில் கூறினார்.
நாடாளுமன்றமே ஒரு வெற்று வேட்டு என்பதை மக்களிடம் சொல்ல இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெட்கமும் இல்லை மானமும் இல்லை. அதன் சபாநாயகருக்கு இப்படி ஏதாவது இருக்கா என்றும் மக்கள் அறிய விரும்புகின்றோம்!.
சீரமைப்பா???? இவர் பாரிசானுடன் தலைவர்களுடன் கூத்தாடி சீரழிவைத்தான் நோக்கிச் செல்வார்!!!!!
இந்நாட்டு நாடாளுமன்றம் கூத்தாடி கூடமாகவே பெரும்பாலும் செயல் படுகிறது!!!!!