இன்று உலக பட்டினி தினம்

eI8tCஇன்று மே 28-ம் தேதி உலக பட்டினி தினம்.

உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர். உலகில் 8  பேரில் ஒருவர் பசியோடு ஓருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார்.ஆசியபசிபிக் பிராந்தியத்தில் 52 கோடி மக்கள், ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள்,  லத்தீன் அமெரிக்கா  மற்றும் கரீபியன் நாடுகளில் 4 கோடி மக்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள்.  உலகில்  ஊட்டச்சத்துக்குறைவால் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும்  உயிரிழக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி  அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் தெரிவிக்கிறது.

பட்டினிச் சவால் அதிகமாக ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள நாடுகளில்  அதிகஅளவில் எதிர்கொண்டு வருகின்றனர். இது  தொடர்பாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள 78 நாடுகளின் பட்டியலில் இந்தியா இன்னமும் 63-வது  இடத்திலேயே உள்ளது. அந்த பட்டியலில் சீனா 1990-முதல் 2013- ஆண்டுக்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13  புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே  குறைத்துள்ளது.

இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப  சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்று அரசியல்  கட்சிகளால் எழுப்பப்படும் கோஷமும் மாறவில்லை,  வறுமையும் மறையவில்லை. பசியையும் நோயையும் வெல்ல முடியாத அரசுகள் இருந்தும் இல்லாத நிலைதான். அந்த வகையில் வறுமையும்  பட்டினியும்தான் தேசிய அவமானமாகக் கருதப்படுகிறது.

-http://www.nakkheeran.in