1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் பணத்துக்குச் சரியான கணக்குக் காட்டப்படாதவரை அந்நிறுவனத்தின் நிர்வாகத்தைக் குற்றவாளி என்றே கருதப்படும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார்.
கேய்மன் தீவில் முதலீடு செய்யப்பட்ட யுஎஸ்1.03(ரிம 4பில்லியன்) பற்றித்தான் மகாதிர் குறிப்பிடுகிறார். அப்பணம் என்னவானது என்பது புரியாத புதிராக உள்ளது.
“கேய்மன் தீவில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பின்னர் அங்கிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் இப்போது சிங்கப்பூரில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அப்பணத்தைக் கண்ணால் பார்க்க முடியவில்ல.
“அப்பணத்தைக் காணாதவரை அதன் இழப்புக்கு (1எடிபி) நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
“பணத்தை நிர்வாகம் கையாடல் செய்திருப்பதாகவே கருதப்படும். இல்லையென்றால் அதை நிரூபிக்க வேண்டும்”, என்று மகாதிர் அவரது வலைப்பதிவில் பதிவிட்டிருந்தார்.
மற்றவர்களின் தவறை உரக்க சொன்னால் தன் தவறு மறைந்து விடும் என்று நினைக்கிறார் இந்த தாத்தா.
காகா வடையை திருடியது ,,,,, ஓநாய் இன்று ஊரையே திருடுவதை பார்த்து ஒப்பாரி வைக்கிறது ,,,,, இருப்பவன் திருடுவது பணம் ,,,, ஆனால் இந்த கிழட்டு காக்க திருடியதோ ,,,, லங்காவி தீவு ,,,,பல ஆயிரகணக்கான எக்கர் நிலம் ,,,,
முதலில் உன் சொத்து விபரங்களை மக்களுக்கு காட்டு! பிறகு மற்றவை…அதுவரை மூடிக்கிட்டு இரு!!!
ஒரு வகையில் இன்று நாட்டில் நடக்கும் அநேக அசம்பாவிதங்களுக்கும் முன்னோடி இந்த காக்கா. சீனனிடமிருந்தும், இந்தியனிடம் இருந்தும், அரசாங்க வேலை வாய்ப்புகள், வியாபார வாய்ப்புகள் ஆகியவற்றைப் பறித்து மலாய்க்காரர்களுக்கு தார வார்த்ததோடல்லாமல், பொருளாதாரத்தில் தனிச்சலுகைகள், மதத்திற்கான தனிச்சலுகை என உசுப்பிவிட்டு விட்டு இன்று அப்படி இப்படி என ஊளையிட்டால் எப்படி ?
இதுவும் ஒரு முன்மதி நாடகம் போல் தெரிகிறது. அன்று மகாதீரின் செல்வாக்கு சிறுது சரிந்து அவர் தேர்தலில் BN ஐ தலைமைதாங்கி நடத்தியிருந்தால் அன்றே அது தோல்வி அடைந்திருக்கும். மாறாக இவர் பதவி இறங்கியதும் மக்கள் புதிய பிரதமாராக வந்த படாவிக்கு வாக்களித்தனர் அதுவும் அபரிமித வெற்றி ஏறக்குறைய 90% வெற்றி. அதுபோல இன்றைய பிரதமரின் செயலால் BN கண்டிப்பாக தோல்வியை காணக்கூடும். ஆக நன்கு வரையறுக்கப்பட்ட நாடகம் அரங்கேற்றி தேர்தல் சமயத்தில் அவராகவோ அல்லது அவரை வீழ்த்தியோ மகளை மீண்டும் BN பக்கம் திசைதிருப்ப எடுக்கப்படும் ஒரு நன்கு ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஒரு நாடகம் என்று நினைக்கலாமே. எது எப்படி இருந்தாலும் மக்கள் தம்முடைய சந்ததியினரின் நன்மையை எண்ணத்தில் கொண்டு தக்க முடிவு எடுக்க இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
உனது காலத்தில் ஹாஸ்பிட்டலில் அம்மா வேலையையும் இல்லாமல் ஆக்கி சொந்த கமபெணியைக் கொண்டு பணம் பண்ணினாய். எஸ்டேட்டை விட்டு வெளியேரிய இந்தியர்களுக்கு வேலை கொடுக்காமல் , வெளி நாட்டு தொழிலாளர்களை கொண்டு கொள்ளை லாபம் அடித்த பாவி நீ