பத்து காவான் முன்னாள் தோட்ட மக்கள் அங்கு தொடர்ந்து கால்நடை வளர்ப்புத் தொழில் புரிந்து வருகின்றனர். தேசிய முன்னணி ஆட்சியில் இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. ஒதுக்கப்பட்ட இவர்கள் பினாங்கின் மக்கள் கூட்டணி ஆட்சியில் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பினாங்கு முதல் அமைச்சருக்கு இரண்டு மனுக்களை சமர்பித்துள்ளனர்.
இம் மனுவின் வழி பத்து காவான் கால்நடை வளர்ப்பு தொழில் சங்கத் தலைவர் ர. பாலசுந்தர் தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
முதல் மனுவில் அவர்களது மாட்டு பண்ணையை சுற்றி வேலி ஒன்றை கட்டிகொடுக்க மாநில அரசாங்கத்தை கேட்டுள்ளனர். இரண்டாவது மனுவில், மாநில அரசு அவர்களை மாற்று இடத்திற்கு போகச் சொல்வதை விட்டுவிட்டு அதே இடத்தில் ஒரு நிரந்திர இடத்தை மாநில அரசாங்கம் ஒதுக்கி குடியிருப்பு வசதிகளை செய்து கொடுக்குமாறு கோரியுள்ளனர்.
பத்து காவானில் 4 அல்லது 5 தலைமுறையாக நாங்கள் இங்கு வாழ்ந்தவர்கள். நாங்கள் இங்கிருந்து மாறி போவதோ அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதற்குமேல் மாட்டுப்பண்ணை ஓர் இடத்திலும் நாங்கள் இன்னொரு இடத்திலும் இருந்துகொண்டு இந்த பிழைப்பை நடத்த முடியாது என்கிறார் பால சுந்தர்.
பத்துகாவானிலிருந்து வேறு இடத்துக்கு எங்கள் மாட்டுபண்ணையை நகற்றினால் பல பிரச்சனைகள் எழும். நாங்கள் யாவரும் சிறு அளவில் நடத்தும் இந்த பிழைப்புக்கு ஆட்பலம் குறைவு. மாடுகள் திருட்டு போகாமல் இருக்க காவல் இருக்காது. ஏதாவது ஓர் அவசரப் பிரச்னை உண்டானால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. புது இடத்தில எங்களுக்கு இருப்பிடம் வாங்க சக்தி இல்லை. தொழிலை நடத்த இயலாது. அப்படி செய்வது எங்கள் தொழிலை புதைப்பது மாதிரி ஆகிவிடும் என்கிறார் பாலசந்தர்.
சமீபத்தில் பத்துகாவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி இந்த பிரச்சனையின் தீர்வுக்காக ஒரு செயற்குழுவை உருவாக்கியதாக கூறியிருந்தார். ஆனால் இச்செயற்குழுவில் பத்து காவான் கால்நடை வளர்ப்போர்கள் சங்க உறுப்பினர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. காரணம், ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் ந. கணேசன் இச்சங்கத்திற்கு ஆதரவாக இருப்பதை மாநில அரசு எதிர்க்கிறது.
அரசு எங்களுடன்தான் நேர் பேச்சு நடத்துவார்கள் என்கிறார்கள். மாநில அரசு உண்மையிலே எங்களுக்கு உதவ வேண்டும் என்றல் அவர்கள் எல்லாவற்றையும் அரசியல் வழியிலே பார்க்காமல், எங்களின் வாழ்க்கையைப் பற்றி கொஞ்சும் யோசித்து ஒத்துழைக்க வேண்டும் என்கிறார் பாலசுந்தர்.
“அரசாங்கமும் அரசியல் தலைவரும் அடைபடையான காரணங்களை அறிந்தவர்கள். ஆனால், கொள்கை அளவில் அதிகமாக எதையும் செய்யவில்லை. புண்ணுக்கு மருந்துபோடும் போக்கோடு செயல்படும் இவர்கள், பள்ளிகளைவிட சிறைசாலைகளைதான் அதிகம் கட்டுவார்கள். இவர்கள்தான் குற்றவாளிகளை உருவாக்கும் குற்றவாளிகள்” – செம்பருத்தி ஆறுமுகம்.
நன்றே சொன்னீர் …. எதாவது நல்லது செய்யலாம் என்று யோசித்து மறு மூச்சு விடுவதற்குள் நம் மீது சேற்றை வாரி வீசும் சக சமூகத்தார் இருக்கும் வரை இப்படித்தான் . அரசியலுக்கும் , அரசியல் கட்சிக்கும், கட்சி தலைவருக்கும் காட்டும் விசுவாசத்தை பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மீது காடுகிரார்கள பாருங்கள் இந்த “நம் இன” அரசியல் முதலைகள்…
டி எ பி ,பாக்காதான், அம்னோ,மா இ.கா ,பாரிசானை விட பெரிதாக எதுவும் இந்தியர்களுக்கு பெரிதாக செய்யவும் இல்லை.இருப்பவர்களை காக்கவும் இல்லை என்பது வெட்ட வெளிச்சம்.துணை வேந்தர் பதவி இந்தியருக்கு கொடுத்தும் பயனில்லை.இந்த தொழிலை காக்க இந்தியர்களுக்கு போராடும் ஹிண்ட்ராப் எப்படி முட்டுக்கட்டை ஆகிறது?மாநில அரசும் சரியில்லை.அடுத்த தேர்தல் வரும்.விரட்டி விடுவோம்.வேறு வழியில்லை.