குறைகூறல்களால் 11வது திட்டத்தின் செயலாக்கத்தைக் தடுக்க முடியாது

pmபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  தம்  தலைமைத்துவம்  பற்றி  என்னதான்  குறை  சொன்னாலும்  11வது  மலேசிய  திட்டத்தைச் செயல்படுத்தும்  அரசாங்கத்தின் கவனம்  அதனால்  மாறப்போவதில்லை  என்கிறார்.

இன்று  அரசு  அதிகாரிகளிடையே  பேசிய  நஜிப்,  அவர்கள்  நாட்டுக்கு  மேலும்  முதலீடுகளைக்  கொண்டுவரவும்  மலேசியாவில்  ஆக்கத்தைப்  பெருக்கி  அதை உயர்- வருமானம்  பெறும் நாடாக  மாற்றவும்  முன்னின்று  பாடுபட  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டார்.

“நாட்டை  மேம்படுத்துவதிலிருந்து  எதுவும்  நம்  கவனத்தைத்  திருப்பிவிட  இடமளிக்கக்  கூடாது.

“நமக்குத்  தேவை வளர்ச்சியை  ஆதரிக்கும்  அரசாங்கம். நடுத்தர  அல்லது  உயர்  வளர்ச்சி  விகிதத்தைக்  கொண்டுவரும்  கொள்கைகளைத்தான்  நாம்  கடைப்பிடிக்க  வேண்டும். வளர்ச்சி  இல்லையேல்  பல  பிரச்னைகளை  எதிர்நோக்க  வேண்டியிருக்கும்”, என்றாரவர்.