நஜிப்: என் வழிக்கு வராத அமைச்சர்கள் வெளியேறலாம்

cabinet1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனக்  குளறுபடிகள்  பற்றி  சில  அமைச்சர்கள்  கேள்வி  எழுப்பியதை  அடுத்து  அவ்விவகாரத்தில்  தம்மை  ஆதரிக்காதவர்கள்  பதவி  துறக்கலாம்  என  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை  இரண்டாவது  நிதி  அமைச்சர்  அஹ்மட்  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லா 1எம்டிபி  சீரமைப்புத்  திட்டத்தை  அமைச்சரவையில்  தாக்கல்  செய்த  பின்னர்  அமைச்சர்களிடம்  நஜிப்  இவ்வாறு  கூறியதாக  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது.