மகாதிர்: மலேசியா 2020 இலட்சியத்தை அடைவது சாத்தியமில்லை

 

vision2020மலேசியா அதன் 2020 இலட்சியத்தின் நோக்கத்தை குறித்த காலத்தில் அடையும் என்று மகாதிர் முகமட் எதிர்பார்க்கவில்லை.

இன்று வெளிநாட்டு செய்தியாளர்கள் கிளப்பின் விருந்து நிகழ்ச்சியில் பேசிய மகாதிர் தனிமனிதர் ஒருவரின் வருமானத்தை மட்டும் இலாக்காக வைத்து செயல்படுவது போதுமானதல்ல என்பதோடு அது முற்றிலும் செயற்கையானதாகும் என்று கூறினார்.

மலேசியா ஒரு மேம்பாடு அடைந்த நாடு என்பதை வர்ணிக்கும் அதன் முன்னேற்றத்தின் இதர அம்சங்கள் குறித்து தற்போதைய நிருவாகம் கவனம் செலுத்தவில்லை என்றார்.

“2020 அளவில் மேம்பாடு அடைந்த நாடு என்ற தகுதியை நாம் அடைய முடியும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது…பேசப்படுவது எல்லாம் உயர்ந்த வருமானம் (பெறுவதுதான்), உற்பத்தித்திறன் குறித்த பேச்சு ஏதும் இல்லை” என்று 2020 இலட்சியத்தை அடைய முடியுமா என்ற கேள்விக்கு அவர் பதில் கூறினார்.