பிரதமர் நஜிப் ரசாக் கடந்த ஜனவரி 2012 ஆம் ஆண்டில் 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அவற்றில் ஒன்றின் கட்டட வேலை அப்போதே நடந்து கொண்டிருந்தது. எஞ்சியுள்ள 6 தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம் எந்த அளவில் இருக்கிறதென்று இதுவரை யாரும் அறிவிக்க வில்லை என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார்.
இது கல்வி அமைச்சின் அதிகாரிகளின் மெத்தனப் போக்கை பிரதிபலிக்கிறதா அல்லது துணைக் கல்வி அமைச்சரின் பி. கமலநாதனின் அலட்சியப்போக்கை காட்டுகின்றதா அல்லது கல்வி அமைச்சிடம் இப்பள்ளிகளைக் கட்டுவதற்கு போதிய நிதி இல்லையா என்பது தெரியவில்லை என்று அவர் தமது ஐயத்தை வெளியிட்டுள்ளார்.
சுங்கை சிப்புட் ஹீவுட் தோட்டப்பள்ளி, சுங்கை பட்டாணியில் தாமன் செஜாத்ராவில் ஒரு புதிய பள்ளி, கிள்ளான் தாமான் செந்தோசாவில் ஒன்று, பெட்டாலிங் ஜெயாவில் ஒன்று, செராஸ் பாண்டார் மக்கோத்தாவில் ஒரு பள்ளி, ஜோகூரில் ஒன்று என ஆறு புதிய தமிழ்ப்பள்ளிகள் இந்நேரம் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஏன் இன்னும் கட்டப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
சென்ற வருடம் செப்டெம்பர் மாத வாக்கில் கல்வித் துணை அமைச்சர் பள்ளி வாரியத்தினர்களிடமும், சம்பந்தப்பட்ட குழுவினர்களுடனும் சந்திப்பு நடத்தியிருக்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டிய குலா, ஒன்பது மாதங்களாகியும் இதுவரையில் இது குறித்து எந்த ஒரு தகவலும் வெளிடப்படாதது ஏன் என்று வினவினார்.
இப்போது அந்தத் திட்டங்களை முன்வைத்தவர்களிடம் சமுதாயம் கேள்விகள் கேட்கத் தொடங்கியுள்ளது. ஏன் அப்பள்ளிகள் இன்னும் கட்டப்படவில்லை? எப்போது அதன் பணிகள் ஆரம்பமாகும்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பள்ளி வாரியத்தினர்கள் குழம்பிப் போய் இருக்கின்றார்கள். இந்தப் பள்ளிகள் சம்பந்தப்பட்ட குழுவினர்கள் தங்களது சொந்த நேரத்தையும், பணத்தையும், உழைப்பையும் பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக அயராது அளித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று குலசேகரன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டில் 524 வது தமிழ்ப்பள்ளியாக கூலிம் பாயா பெசாரில் ஒரு தமிழ்ப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடையும் அதே வேளையில் இந்த 6 புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கான வளர்ச்சி பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லாமலேயே இருப்பது வேதனை அளிக்கிறது என்றாரவர்.
பிரதமர் நஜிப் வாக்குறுதி கொடுத்திருந்தது போல, இப்பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் சமுதாய அக்கறை உள்ள இந்திய குத்தகையாளர்களிடமே வழங்கப் பட வேண்டுமென்று கேட்டுக் கொண்ட குலசேகரன், “இந்த குத்தகைகள் வழங்குவதில் நேர்மையான போக்கும் வெளிப்படையான தன்மையும் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதை கல்வி அமைச்சு உறுதி செய்ய வேண்டும்”, என்றார்.
இதற்கான அறிவிப்புகளை இந்திய சமூக பொருளாதார வளர்ச்சித்துறையின் தலைவர் முனைவர் என். எஸ். இராஜேந்திரனும், துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதனும் விரைவில் வெளியிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக குலசேகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
பழனியும் சுப்பிராவும் கமலாவும், மொட்டை கூட்டம் போடு …!
முட்டையாவது வரலாம் ….!!
குலா அண்ணா..இது தெரியாதா அண்ணா? இதை வெச்சுத்தான் இந்த மங்காத்தா மாங்கா கட்சிக்காரனுங்க அடுத்த தேர்தலிலே சிக்ஸர் அடிக்கப் பார்ப்பானுங்க..இப்பவே ஹெம்பர் எல்லாம் ரெடியாகுதாமே…திடீர் தேர்தலோ?
ஐயா மாண்புமிகு அவர்களே, புதிதாக 5 பள்ளிகளுக்கு கடந்த வருடத்திலும் இவ்வருட ஆரம்பத்திலும் புதிய மற்றும் இணைக் கட்டடங்களைக் கட்ட பள்ளி நிருவாக வாரியத்திடம் பணத்தை ஒப்படைத்தார்களே அப்பணம் எப்படி கையாளப் படுகின்றது என்றும் கேள்வி எழுப்புங்கள். கட்டட செலவுக்கான ரசீதுக்களை எல்லாம் பக்காவா வாங்கி வைத்துக் கொண்டு நாங்கள் ஊழல் செய்யவில்லை என்று இப்பள்ளி நிருவாக இயக்குனர் வாரியங்கள் சொன்னால் மட்டும் போதாது. ஒவ்வொரு தரப்பினர்க்கும் கொடுக்கும் சேவைக் கட்டணம் “பொதுச் சந்தை விலையில்” தான் கொடுக்கப் பட்டுள்ளதா என்று யார் ஆராய்வார்?. அரசாங்க குத்தகைகளுக்கு போடப் படும் விலைப் பட்டியலைப் போன்றே இவர்களும் சேவைக் கட்டணத்தை கொடுத்தால் அப்புறம் பள்ளிக் கட்டடங்கள் முழுமையாக ஏறாமல் பாதியில் நின்று மீண்டும் பொது மக்களிடம் கையேந்தி நிற்க வேண்டும். மாநில கல்வித் துறை மற்றும் பிரதமர் துறையின் தமிழ் பள்ளிகள் அமைப்புக் குழுவும் அச்சேவைக் கட்டணம் அரசாங்க குத்தகை விலைப் பட்டியலுக்கு ஒத்திருக்கின்றது என்று சொல்லி கையெழுத்து போட்டு விடுவார்கள். ஆனால் நம் தமிழ் பள்ளிகள் முழுமையான பயன் பெற வேண்டுமானால் இன்று சந்தையில் போட்டி நிலையில் அச்சேவை கட்டணங்களைக் குறைத்துப் பேசி (seek the best discount possible) கட்டடத்தை அரசாங்கம் கொடுத்த பணத்தைக் கொண்டே கட்டி முடிக்க ஆவன செய்ய வேண்டும். இல்லையேல் முன்பு இந்தியர்களைச் சார்ந்த அரசியல் கட்சி தமிழ் பள்ளிகளின் பெயரில் வாய்க்கு வாய்க்கரிசி போட்டுக் கொண்டது போல் புதிதாக முளைத்த புல்லுருவிகள் இவர்கள் வாய்க்கு வாய்க்கரிசி போட்டுக் கொள்வார்கள். அப்புறம் தமிழ் பள்ளிகளின் நிலை ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற நிலைக்கே போய் விடும்.
நக்கல் நாயகன் …நாதன் சொல்லட்டுமே …!
வரும் 14 போதுதேர்தளுக்குள் கட்டி விடுவதாக ப. கமலநாதன் சொன்னார். நிலத்தின் மண் சோதனை செய்யும் மெசின் தப்பான ஆய்வுகளை தருகிறதாம். 11 மலேசியா திட்டத்தில் அந்த மண் தோண்டி மிசின் இல்லையாம். தப்பு நடந்துவிட்டதாம்.
ம.இ.கா. வினர் இதற்கு சரியான விளக்கம் வைத்திருக்கிறார்கள். பினாங்கில், சிலாங்கூரில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று முதல் கேள்வி வரும். உங்கள் பதில் அவர்களுக்குத் தேவை இல்லை. அந்தக் கேள்விகளை வைத்தே அவர்கள் அரசியல் நடத்துவார்கள்! இந்த இரண்டு கூத்தாடிகளினால் கல்வி அமைச்சர் முகைதீனுக்குத் தான் கொண்டாட்டம். தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆவப்போவது ஒன்றுமில்லை!
கோவிந்தா கோவிந்தா …..மலேசியா இந்தியர் கட்சி பற்றி பெசாதிர்கள் புளிச்ச போன கதை.
14 வது பொது தேத்தல் போது பைலிங் அடித்து , இந்தியர் வாக்குகள் வாங்கிய பின், மறுபடியும் பைலிங் அடிக்க மாட்டார்கள் ஆப்பு அடிப்பார்கள், இந்த ஏமாற்று வேலைக்கு ம இ கா ,பி பி பி ,ஐ பி எப் , மக்கள் சக்தி , மறுபடியும் வேதாவின் வேலையை காட்ட ஹிண்ட்ராப் கட்சியும் அம்னோ, பாரிசானுக்கு ஆதரவு கொடுக்கலாம் !
இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு கேள்வி கேட்டால் எப்படிங்க ஒய்.பி. குலா…? நம்பிக்கை வேண்டும் சார்..!