நேற்றிரவு அமைச்சர்கள் கூடி என்ன பேசினார்கள்?

meetநேற்றிரவு அமைச்சர்கள்  கூட்டம்  ஒன்று  நடைபெற்றுள்ளது. அதில்  என்ன  விவாதிக்கப்பட்டது  என்பது  மர்மமாக  உள்ளது.

கூட்டம்  நடந்த  இடத்தில்  குறைந்தது  16  அமைச்சர்கள்  காணப்பட்டதாக  ஸ்டார்டிவி  கூறியது. கூட்டத்தின்  நிகழ்வு  பற்றித்  தெரிவிக்க  எவரும்  முன்வரவில்லை.  இரண்டாம்  நிதி  அமைச்சர்  ஹுஸ்னி  ஹனாட்சா மட்டும்  சிறிது   பேசினார்.  ஆனால், கூட்டத்தில்  பேசப்பட்ட  விவரங்களை  வெளியிடவில்லை.

“இது ஒரு  உள் கலந்துரையாடல்….  பல  விசயங்கள், ஆர்எம்கே 11(பதினோராவது மலேசியத்  திட்டம்) மற்றும்  பலவற்றைப்  பற்றிப்  பேசினோம்”, என்று  கூறினார்.

செய்தியாளர்களும்  விடாமல் 1எம்டிபி  பற்றி  விவாதிக்கப்பட்டதா  என்று  வினவினார்கள். “இல்லை, இல்லை”, என்று  மறுத்தவாறு ஹுஸ்னி  மின்தூக்கியை  நோக்கி  நடை போட்டார்.

அமைச்சர்கள்  கூட்டம் நடைபெற்ற  அதே மெஜஸ்டிக்  ஹோட்டலில்தான்  அமைதிக்கும்  நல்லிணக்கத்துக்குமான கிறிஸ்துவ அமைப்பின்  தொடக்க  விழாவில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கலந்து  கொண்டிருந்தார்.   ஆனால், அமைச்சர்கள்  கூட்டத்துக்கு  அவர் சென்றதாக  தெரியவில்லை.

அது, 1எம்டிபி  பற்றி  அமைச்சர்களுக்கு  விளக்கமளிப்பதற்காகக் கூட்டப்பட்ட  கூட்டம்  என்று  உத்துசான்  மலேசியா  கூறியது. இரவு  மணி  தொடங்கி  மூன்று  மணி  நேரத்துக்கு  அக்கூட்டம்  நடந்தது.