டிஏபி-இன் ‘பிரித்தாளும்’ சூழ்ச்சி பக்கத்தான் ரக்யாட்டில் நிலவும் அரசியல் ஒத்துழைப்பைக் கெடுக்கும் என டேவான் உலாமா இடைக்காலத் தலைவர் மாபோட்ஸ் முகம்மட் கூறினார்.
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்மீது டிஏபி தொடுக்கும் தாக்குதல்கள் பாஸ் தலைமைத்துவத்தில் பிளவை உண்டுபண்னலாம். சாபா, சரவாக்கில் பக்கத்தான் ரக்யாட் உடைந்ததற்கு இதுதான் காரணம் என்றாரவர்.
“இப்போது பாஸ் முக்தாமாருக்குப் பின்னர் பக்கத்தானில் இருப்பது பற்றி ஒரு முடிவெடுக்கப்படும் என்று டிஏபி கூறியிருப்பதுகூட கட்சித் தேர்தலில் அது தலையிடுவதற்கான சமிக்ஞைதான்.
“இது தெள்ளத் தெளிவான ஒரு தலையீடு. பேராளர்கள் டிஏபி-க்கு ஆதரவான தலைமைத்துவத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறியுள்ளது”, என இன்று கோம்பாக்கில் நடைபெற்ற டேவான் உலாமா முக்தாமாரில் மாபோட்ஸ் கூறினார்.
உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் பிறர் ஏன் அங்கு விலக்குமார் கொண்டு கூட்ட வேண்டும்?.
“கட்சித் தேர்தலில் அது தலையிடுவதற்கான சமிக்ஞைதான்” என்றால் உங்களுக்கு சொந்த புத்தி இல்லையா?
உங்களுக்கே உங்க மேல நம்பிக்கை இல்லன எப்படி நைனா..?