கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கை டிஏபி தாக்கிப்பேசியபோது அவரைத் தற்காக்கத் தவறிய பாஸ் இளைஞர் தலைவர்களைக் கோழைகள் எனப் பேராளர் ஒருவர் சாடினார்.
“டிஏபி, பாஸ் தலைவர் பற்றிப் பொய்களை அவிழ்த்து விட்டபோது பாஸ் இளைஞர் தலைமைத்துவம் தலைவரைப் பாதுகாக்கத் தவறிவிட்டது.
“பாஸ் இளைஞர்கள் மெளனம் காத்தார்கள். தன் தந்தை அவமதிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதா நல்ல மகனுக்கு அடையாளம்……. இது நல்ல இளைஞர்களின் அடையாளமல்ல, கோழைகளின் அடையாளம்”, என கூட்டரசு பிரதேச பேராளர் முகம்மட் ரிட்சுவான் அரிப்பின் கூறினார்.
“பக்கத்தான் நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் ஒன்று சொல்வேன். பாஸ் இளைஞர்களாகிய நாங்கள் எங்கள் தலைவர் அவமதிக்கப்படுவதையோ எதிர்க்கப்படுவதையோ பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். தலைவரைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்”, என்றவர் கூற கூட்டத்தினர் “அல்லாகூ அக்பர்” என முழக்கமிட்டனர்.
“கோழை” – களுக்கு இலக்கணம் மாறுதோ?. சோரம் போன தலைவருக்கு வக்காலத்து வாங்கினால் அப்புறம் பாஸ் கட்சியின் நிலை அம்நோவைப் போன்றாகிவிடும். அதுதான் அக்கட்சி தலைவரின் விருப்பம் என்றால், பாஸ் கட்சி உறுப்பினர்கள் கோழையாகவே இருந்து விட்டு போவது மேல்!.
தற்காத்துப் பேசாதவர்கள் கோழைகள்,தற்காத்துப் பேசியவர்கள் கோழிகள்..