டிஏபி அது பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கைக் குறைகூறுவதன்வழி அக்கட்சியின் தேர்தலில் தலையிடுவதாகக் கூறினால் மட்டும் போதாது அதை நிரூபிக்கவும் வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை விடுத்த டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஹாடி-க்கு எதிராக அறிக்கைகள் விடுப்பது “தலையீடு” என்று அர்த்தமாகுமா என்றும் வினவினார்.
“அம்னோவும்தான் பாஸுக்கு எதிராக அறிக்கை விடுத்துள்ளது. மற்ற கட்சிகளும்தான். தயவு செய்து எங்களைப் பழித்துரைக்காதீர்கள்”, என லிம் ஜார்ஜ்டவுனில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
“நாங்கள் அவர்களின் கட்சித் தேர்தலில் தலையிடுவதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தால் அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும்”, என்றாரவர்.