கடத்தல்காரர்கள் உடல் உறுப்புகளை எடுத்துப் பணத்துக்கு விற்றிருக்கிறார்கள்

haronரொஹின்யாக்களையும்  வங்காள  தேசிகளையும்  கடத்திவரும்  கடத்தல்காரர்கள்  அவர்களைப் பயன்படுத்தி  மில்லியன்  கணக்கில்  பணம்  பண்ணியிருக்கிறார்கள்.

முதலில், மியான்மாரிலிருந்து  தப்பியோட  ஒவ்வொரு  அகதியிடமிருந்தும்  ரிம5,000  வாங்குவார்கள்.  அதன்  பிறகு  தாய்லாந்து-மலேசிய  எல்லையிலுள்ள  காட்டு  முகாம்களுக்குக்  கொண்டுவரப்படும்  அவர்கள்  மேலும்  ரிம3000-இலிருந்து ரிம5,000வரை  கொடுத்தால்தான்  அங்கிருந்து  வெளியேற  முடியும்.

பணம்  கொடுக்காதவர்கள்  கொல்லப்பட்டு  அவர்களின்  உடல்  உறுப்புகள்  பணத்துக்கு  விற்கப்படும்.

இவ்வளவையும்  கண்ணால்  கண்டு  வந்திருக்கிறார் பதினாங்கு  வயதே  ஆன  ஹரோன்  ரஷிட்.

மனிதர்களைக் கடத்திவரும்   கடத்தல்காரர்கள்  தங்களுக்குப்  பணம்  கொடுக்காதவர்களை  அடித்தே  கொன்று  விடுவார்களாம்.  பின்னர்  இறந்தவர்களின்  உடலைப்  பிளந்து  கண்கள், சிறுநீரகங்கள்,  இருதயம்,  நுரையீரல்கள், கல்லீரல்கள்  ஆகியவற்றையும்  மற்ற உறுப்புகளையும்  எடுத்து விற்று  விடுவார்களாம். இளம் பெண்களாக  இருந்தால்  வன்புணர்வுக்கு  ஆளாக்கப்படுவதும்  உண்டு.

“அவர்கள் உடல்களை  வெட்டிப்  பிளப்பதைக்  கண்ணால்  கண்டேன்.

“முகாம்களில்  அதற்குமுன்  பார்க்காத  வெளியாள்கள்  வந்து  உடலை  வெட்டி   உறுப்புகளை அகற்றி, பிளாஸ்டிக்  பைகளில்  போட்டு  உடனே   கொண்டு  சென்று  விடுவார்கள்”, என்றாரவர்.

ஹாரோனும்  காட்டு  முகாமில் மூன்று  மாதங்கள்  இருந்தார். அவரின்  உறவினர்கள்  ரிம5,000  கொடுத்து  அவரை  அங்கிருந்து  வெளியில்  கொண்டு  வந்தனர்.