1எம்டிபி விவகாரம் கையாளப்படுவது சம்பந்தமாக அமைச்சர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்த ஊகங்கள் அதிகரித்து வரும் வேளையில், மூன்று அமைச்சரவை உறுப்பினர்கள் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலிருந்து வெளியேறினர் என்று கூறப்படுகிறது.
வட்டாரங்களை மேற்கோள் காட்டி சைனா பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாடு அமைச்சர் முகமட் ஷாபி அப்டால், தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் அஹமட் ஷாபெரி மற்றும் இளைஞர் மற்றும் விளையாடுதுறை அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோரே கூட்டத்திலிருந்து வெளியேறிய மூன்று அமைச்சர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கத்திற்கு மாறாக, துணைப் பிரதமர் முகைதின் யாசின் அமைச்சரவை கூட்டம் முடிவுற்றதும் அங்கிருந்து கிளம்பி விட்டார் என்றும் அந்த நாளிதழ் வட்டாங்களை மேற்கோள் காட்டி கூறிற்று.
வெளியேறிய நான்கு அமைச்சர்களில், ஷாபி, கைரி மற்றும் முகைதின் ஆகிய மூவரும் 1எம்டிபி பிரச்சனைகளுக்கு யார் பொறுப்பு என்பது தெரிய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளவர்களாவர்.