பக்கத்தான் கூட்டணியில் இருக்க ஹாடி ஒப்புக்கொள்கிறார்-நிபந்தனைகளுடன்

conditionalபாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், பக்கத்தான்  ரக்யாட்டுடன்  அரசியல்  ரீதியில் பாஸ்  ஒத்துழைக்கும்  என்று  கூறினார். ஆனால்,  அந்த ஒத்துழைப்பு “பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட”  இடங்களில் மட்டுமே.

அடக்குமுறை, ஊழல், வீண்  பணச்  செலவு  போன்றவற்றுக்கு  எதிராகவும்  நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மைக்காகவும்  பாஸ்  பக்கத்தானுடன்  சேர்ந்து  போராடும்.

ஆனால், மற்ற  இலக்குகளை  அடைய  கட்சிகள்  தனித்தனியாகத்தான்  போராட  வேண்டும்.

“பக்கத்தானின்  பொதுக்  கொள்கை  உடன்பாட்டில்  இல்லாத  திட்டங்களுக்காக  கட்சிகள்  தனித்தனியாகத்தான்  போராட  வேண்டும்”, என்று  ஹாடி  கூறினார்.

நேற்று நடைபெற்ற  உலாமா  முக்தாரில்  டிஏபி-யுடன்  உறவுகளைத்  துண்டித்துக்கொள்ளும்  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டதை  அடுத்து  ஹாடி  இவ்வாறு  பேசினார்.

டிஏபி  ஏற்கனவே  ஹாடியுடன்  உறவுகளை  முறித்துக்  கொண்டிருக்கிறது. ஹாடி, பொதுக்  கொள்கை  உடன்பாட்டுடன் ஒத்துப்போவதில்லை, பக்கத்தான்  தலைமைத்துவக்  கூட்டத்தில்  கலந்துகொள்வதில்லை  என்று  அது  காரணம்  கூறியது.