ஜாஹிட்: ஒத்துப்போகாதவர்கள் விலகுவதே மேல்

hamidiபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குடன்  ஒத்துப்போகாத  அமைச்சர்கள் “சொல்லாமல்  கொள்ளாமல்” பதவி விலகுவது   நல்லது  என்கிறார்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி.

அமைச்சர்களை  நியமிக்கவும்  நீக்கவும்  அதிகாரம்  படைத்தவர்  பிரதமர். எனவே, அமைச்சரவை  உறுப்பினர்களுக்கு   பிரதமர்   எடுக்கும்  முடிவுகளுடன்  ஒத்துப்போகும்  கடப்பாடு உண்டு  என்றாரவர்.

“எந்தவொரு  அமைச்சருக்கும் (பிரதமர்மீது) நம்பிக்கை  இல்லையென்றாலோ  நம்பிக்கை  போய்விட்டது  என்றாலோ அல்லது அவரின்  முடிவை  எதிர்த்து அவர்கள் பொதுவில்  கேள்வி  கேட்கத்  தொடங்கி  விட்டாலோ  சொல்லாமலேயே  பதவி  விலகுவதே அவர்களுக்குக்  கெளரவமாக  இருக்கும்”, என ஜாஹிட்  கூறினார்.