ஐஜிபி: என் முடிவு பிரதமருக்கும் பிடிக்கவில்லைதான்

khalidபிரதமருடனான  கலந்துரையாடலை இரத்துச்  செய்யும்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு பக்காரின்  முடிவு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  பிடிக்கவில்லைதான்.

மலேசியாகினியிடம்  பேசிய காலிட்  இன்று  காலை   தம்  முடிவைப்  பிரதமரிடம்  தெரிவித்ததாகக்  கூறினார்.

“என்  முடிவு பிரதமருக்கும்  பிடிக்கவில்லைதான். ஆனால் பாதுகாப்புக்  காரணங்களுக்காகவும்  இணக்கநிலையைக்  காக்கவும் அந்த  நிலைப்பாட்டைக்  கைக்கொண்டு  நிகழ்வை  இரத்துச்  செய்ய  வேண்டியதாயிற்று.

“அமைதியை  விரும்பும்  மலேசியர்கள் புரிந்து  கொள்வார்கள்  என்று  நம்புகிறேன்”. போலீஸ்  தலைவர்  என்ற  முறையில்  பாதுகாப்பை  முன்னிட்டு  நடவடிக்கைகள்  எடுப்பது  தம்முடைய  பொறுப்பாகும்  என்றாரவர்.

அந்நிகழ்வை இரத்துச்  செய்ததற்கான  காரணங்களை  விளக்கி  வெள்ளிக்கிழமை  தொழுகைக்குப்  பின்னர்  அறிக்கை  ஒன்றை  வெளியிடவிருப்பதாகவும்  காலிட்  கூறினார்.