கலந்துரையாடலில் கலந்துகொள்ள பிரதமர் தயாராக இருந்தார்

khaiபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  காலை  நடைபெறவிருந்த  கலந்துரையாடலில்  கலந்துகொள்வதற்காக வீட்டைவிட்டுப்  புறப்படுவதற்கு ஆயத்தமாகிக்  கொண்டிருந்தார். அப்போது  போலீஸ்  அவரிடம்  அதில்  கலந்துகொள்ள  வேண்டாம்  என்று  அவருக்குக்  கூறியது.

கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்கள்  இதனைத்  தெரிவித்தனர்.

“பிரதமர்  புறப்பட்டு  வரத்  தயாராகி  விட்டார்…… அப்போதுதான்  போலீஸ்  தலையிட்டது”, என   ஏற்பாட்டுக் குழுத்  தலைவர்  கைருல்  அன்வார்  ரஹ்மாட்  கூறினார்.

கலந்துரையாடலைத்   தவிர்க்கும்  நோக்கம்  நஜிப்புக்கு  இல்லை  என்பதைச்  செய்தியாளர்களுக்குத்  தெரிவிக்க  கைருல்  இவ்வாறு  கூறினார்போலும்.