சாபா நிலநடுக்கத்தில் ஐவர் பலி?!

quakeஇன்று காலை சபா, ரானாவைத் தாக்கிய  ரிக்டர்  கருவியில்  5.9  என்று பதிவான நிலநடுக்கத்தால் கினாபாலு  மலையில் உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது கினபாலு மலை 1 நிமிடம் குலுங்கி,  அக்குலுக்கலில்  சரிந்து  விழுந்த  பாறைகளால் குறைந்தது ஐந்து  பேராவது  தாக்கப்பட்டிருக்கலாம் என  த  ஸ்டார்  அறிவித்தது.

அதிகாரப்பூர்வமற்ற  அத்தகவலை  உறுதிப்படுத்த  அதிகாரிகள்  மறுத்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட வேளை கினபாலு மலை  உச்சியிலும்  அதனைச்  சுற்றிலும்  சுமார் 100 மலையேறிகள்  இருந்துள்ளனர்.

தீயணைப்புப் படையினரும்,  போலீசாரும்  கினாபாலு  மலை  பூங்காவுக்கு  விரைகின்றனர். மலையில் சிக்கிக்கொண்டிருக்கும்  மலியேறிகளையும்  வழிகாட்டிகளையும்  மீட்டுவர  ஹெலிகாப்டர்களும்  விரைந்துள்ளன.

மலையேறியவர்களில் பெரும்பாலோர், சூரிய உதயத்துக்கு  முன்னதாக  4,095 மீட்டர் உயர  மலையிலிருந்து  இறங்கிக்  கொண்டிருந்தபோது  காலை  மணி  7.17-க்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.