பேராளர்: டிஏபியை வெட்டி விடுவது பற்றி 30 நிமிடத்தில் முடிவு செய்ய இயலாது

muktaடிஏபி-யுடன்  உறவுகளைத் துண்டித்துக்  கொள்வதில்  அவசரம்  கூடாது  என  சிலாங்கூர் பேராளர்  சாபி  ங்கா  பாஸ்  முக்தாமாரில்  எச்சரித்தார்.

உலாமா  பிரிவு  கொண்டுவந்த  தீர்மானத்தை  நடப்பு  முக்தாமாரில்  விவாதிப்பது  மட்டும்  போதாது  என்றாரவர்.

“நல்ல  தீர்மானம்தான். ஆனால், நன்றாக யோசித்துப் பாஅருங்கள், ஒருவரை ‘Aku ceraikan kau’ என  வெட்டி  விடுவது  எளிது.

“ஆனால், குழந்தைகள், நம்  சொத்து, பாஸும்  இஸ்லாமும்  முன்னோக்கிச்  செல்வதைக்  காணத்  துடிக்கும்  மலாய்க்காரர்க்ளின்  அவா  இவையெல்லாம்  என்ன  ஆவது”. தலைவரின்  கொள்கையுரை  மீதான வாதத்தின்போது  ங்கா  இவ்வாறு  கூறினார்.

ஒரு  சிறப்பு  முக்தாமாரில்  அதை விவாதிக்க  வேண்டும்  என்றவர்  முன்மொழிந்தார்.

“இதை  ஒரு  சிறப்பு  முக்தாமாருக்குக்  கொண்டு  வாருங்கள். இரண்டு  பகல்கள்,  இரண்டு  இரவுகள்  விவாதிப்போம். இதை  விவாதிக்க 30 நிமிடங்கள்  போதா”, என்றார்.

டிஏபி-யுடன்  உறவுகளைத் துண்டித்துக்  கொள்ள  உலாமா  மன்றத்தில்  புதன்கிழமை  நிறைவேற்றப்பட்ட  தீர்மானம்மீது  ங்கா  கருத்துரைத்தார்.