பாஸ்-டிஎபி மணவிலக்கு: ஏன் விவாதம் இல்லை, பேராளர்கள் கேள்வி

 

PASfordivorceபாஸ் கட்சியின் 61 ஆவது மாநாட்டில் விவாதம் ஏதும் இன்றி கட்சியின் உலாமாக்கள் பிரிவு முன்வைத்த டிஎபியுடனான உறைவைத் துண்டிக்கும் முன்மொழிதலை கட்சி ஏற்றுக்கொண்டதற்கு பேராளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்வாறான முடிவை எடுப்பதற்கு கட்சிக்கு துணிவு இருக்கையில், இந்த விவகாரத்தை விவாதிப்பதற்கு பேராளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று கட்சியின் முன்னாள் தலைவர் ஃபாட்ஸில் நூரின் மகன் முகம்மட் ஃபாயிஸ் ஃபாட்ஸில் கூறினார்.

“டிஎபியுடனான உறவை முறித்துக் கொள்வதற்கான தைரியம் நமக்கு இருந்தால், அது பேராளர்களின் விவாதத்திற்கு விடப்பட வேண்டும்.

“நமக்கு மணவிலக்கு வேண்டும். ஆனால் அதே வீட்டில் இருக்க வேண்டும். நமக்கு  டிஎபியுடன் இருக்க விருப்பம் இல்லை. ஆனால், பாக்கதானுடன் இருக்க வேண்டும்.

“இது ஒரு நொண்டி கூட்டணி”, என்று அவர் இன்று காலையில் நடந்த கூட்டத்தில் கூறினார்.