சாபா நிலநடுக்கம்: துயிலுறியும் சுற்றுலாப் பயணிகள்கள்தான் காரணம் என்கிறார் துணை முதலமைச்சர்

 

Sabah earth quake1நேற்றிரவு சாபா, ரானாவ் பகுதியைத் தாக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு மவுண்ட் கின்னாபாலுவில் தங்களுடைய ஆடைகளை அகற்றிய சுற்றுலாப் பயணிகளின் நடத்தைதான் காரணம் என்று சாபா துணை முதலமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் கூறுகிறார்.

“இது அநாகரிகமான செயல் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்போம். அவர்கள் சாபாவுக்கு மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்வோம்.

“அந்த தனிநபர்களின் மரியாதை குறைவான நடத்தையினால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டது Sabah earth quake2என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவரை மேற்கோள் காட்டிய போர்னியோ போஸ்டின் இன்றையச் செய்தி கூறுகிறது.

கடஸான்டுசுன் சமூகத்தின் தலைவரான பைரின், அவருடை மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவர்களாக அல்லது முஸ்லிம்களாக இருந்த போதிலும், அவர்கள் மவுண்ட் கின்னபாலு புனித பூமி என்ற பாரம்பரியத்தை நிலைநிறுதி வருகின்றனர் என்றார்.

சினமடைந்துள்ள ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக சமயச் சடங்குகள் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.